ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள கருப்பு உளுந்து கவுனி அரிசி கஞ்சி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

- Advertisement -

உங்க எலும்புகள் பலமாக எலும்பு நல்ல பலம் பெற மாசத்துக்கு ரெண்டு தடவை எந்த கஞ்சியை நீங்க குடிக்கணும். அதுக்கு இந்த கஞ்சில என்னென்ன பொருள்கள் சேர்த்து குடிக்கணும் அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். உடல்ல எலும்புகள் ரொம்பவே பலமாக இருந்தால் மட்டும்தான் நம்மளால நல்ல செயல்பட முடியும். எலும்புகளோடு பலத்த அதிகரிக்கிறதுக்கு நம்ம உணவுல சேர்த்துக்கக்கூடிய முக்கியமான ஒரு பொருள் அப்படின்னு பார்த்தா அநு உளுந்து தான்.

-விளம்பரம்-

அதுவும் கருப்பு உளுந்து சேர்த்து சாப்பிடும் போது அது உடலுக்கு நல்ல வலிமை தருகிறது. கருப்பு உளுந்துல இருக்குற தோல அவ்ளோ சத்துக்கள் இருக்கு அப்படின்னு சொல்றாங்க. இந்த கருப்பு உளுந்த கஞ்சி வச்சி சாப்பிடும்போது அது உடலுக்கு நல்ல பலத்தை தருகிறது. இந்த கருப்பு உளுந்து ஓட கவுனி அரிசியும் சேர்த்து கஞ்சி வைக்கும் போது அது இன்னுமே நல்ல அதிகமான ஆரோக்கியமான பலன்களை கொடுக்கும் .

- Advertisement -

அப்படியே இந்த கருப்பு உளுந்து கவுனி அரிசி சேர்த்து கஞ்சி வச்சி சாப்பிட்டா உடலுக்கு வலிமையை சேர்த்துகிறது. இந்த கருப்பு உளுந்து கஞ்சியை பெரியவர்கள் இந்த சிறியவர்களாக எல்லாருமே சாப்பிடலாம். உடலுக்கு அவ்வளவு சத்துக் கொடுக்கக்கூடியது இந்த கருப்பு உளுந்து கவுனி அரிசில இருக்கிற சத்துக்கள் அப்படியே உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். எலும்புகளை வலிமைப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் மூட்டு வலிகளையும் குறைப்பதற்கு இது பயன்படுத்துகிறது. இந்த சுவையான ஆரோக்கியமான கருப்பு உளுந்து கவுனி அரிசி கஞ்சி எப்படி வைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
5 from 1 vote

கருப்பு உளுந்து கவுனி கஞ்சி | Black Urad Kavuni Kanji Recipe In Tamil

கருப்பு உளுந்து கவுனி அரிசி சேர்த்து கஞ்சி வச்சி சாப்பிட்டா உடலுக்கு வலிமையை சேர்த்துகிறது. இந்த கருப்பு உளுந்து கஞ்சியை பெரியவர்கள் இந்த சிறியவர்களாக எல்லாருமே சாப்பிடலாம். உடலுக்கு அவ்வளவு சத்துக் கொடுக்கக்கூடியது இந்த கருப்பு உளுந்து கவுனி அரிசில இருக்கிற சத்துக்கள் அப்படியே உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். எலும்புகளை வலிமைப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் மூட்டு வலிகளையும் குறைப்பதற்கு இது பயன்படுத்துகிறது. இந்த சுவையான ஆரோக்கியமான கருப்பு உளுந்து கவுனி அரிசி கஞ்சி எப்படி வைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time15 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Black urad Kavuni rice Kanji
Yield: 4
Calories: 350kcal

Equipment

  • 1 அடி கனமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கருப்பு உளுந்து
  • 1/4 கப் கவுனி அரிசி
  • 1/4 கப் வெல்லம்
  • 2 ஏலக்காய்
  • 1 கப் தேங்காய் துருவல்

செய்முறை

  • முதலில்  உளுந்திலும் கவுனி அரிசியிலும் ஏதும் கற்கள் தூசுகள்இருக்கிதா என்பதை பார்த்து சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகுஅடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கருப்பு உளுந்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதில் கவுனி அரிசியை சேர்த்து வறுத்து கொள்ளவும். இரண்டையும் அப்படியே கடாயில் வைத்து தேவையான அளவு நீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
     
  • பிறகு வெல்ல பாகு தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் வெல்லம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொதி வர வைக்க வேண்டும்.முழுமையான பாகுபதம் வரவேண்டும் என்று அவசியம் இல்லை நன்றாக கரைந்து லேசாக கெட்டியாகினால் போதும்.
  •  பிறகு வெல்லப்பாகை தனியாக எடுத்து வைத்துவிட்டு வேண்டும்.இப்பொழுது வேக வைத்துள்ள கருப்பு உளுந்து கவுனி அரிசியை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  • பிறகு ஒரு பாத்திரத்தில் கஞ்சி செய்வதற்கு தேவையான அளவு நீர் சேர்த்து மூடி போட்டு தண்ணீரை சூடு செய்ய வேண்டும். தண்ணீர் சூடானதும் அதில் அரைத்து வைத்துள்ள கருப்புஉளுந்து கவுனி அரிசியை விழுதை கலந்து கரண்டி போட்டு கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.
  • கருப்பு உளுந்து கவுனி அரிசி கஞ்சி கொதித்து வரும் பொழுது கலந்து விட்டுக் கொண்டே அதில் பொடித்த ஏலக்காயை சேர்த்து கலந்து விட வேண்டும்.  நன்றாக கஞ்சி கொதித்து வந்த பிறகு அதில்  வெல்லப்பாகை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • இறுதியாக கஞ்சி நன்றாக கொதித்து வந்த பிறகு தேங்காய் துருவலை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை நிறுத்தினால். சுவையான ஆரோக்கியமிக்க எலும்புகளை பலப்படுத்தக்கூடிய கருப்பு உளுந்து கவுனி அரிசி கஞ்சி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 350kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Fat: 0.02g | Sodium: 3mg | Potassium: 54mg | Fiber: 3g

இதையும் படியுங்கள் : இட்லி, தோசையுன் சாப்பிட ருசியான ராயலசீமா உளுந்து பச்சடி இதுவரைக்கும் யாருமே டேஸ்ட் கூட பண்ணி இருக்க மாட்டீங்க!!!