குக் வித் கோமாளியில் கனி ரெசிபி தித்திக்கும் சுவையிலன பிரெட் பால் ரப்டி இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் ரப்டியும் ஒன்று. ரப்ரி என்றும் அழைக்கப்படும் ரப்டி ஒரு உன்னதமான வட இந்திய விருந்தாகும், இது மிகவும் இனிமையானது. இந்த சுவையான ரெசிபி பண்டிகை காலங்களில் மட்டும் செய்யப்படுவதில்லை. சாதாரண நாட்களில் கூட இந்த இனிப்பு பலகாரம் செய்யப்படுகிறது. இந்த சுவையான பிரெட் ரப்டி பிரெட், பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி, முந்திரி மற்றும் பாதாம் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

-விளம்பரம்-

இதை டின்னருக்கு முன்னால் சாப்பிடும் ஸ்வீட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். பிரெட் பால் ரப்டி இது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கனி அவர்கள் செய்த ஒரு சுவையான இனிப்பு வகை. இதனை பிரட் குலாப் ஜாமுன் எனவும் கூறலாம். இவை தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற பண்டிகை காலங்களின் போதும் மற்றும் திருமண விழாக்களின் போதும், பிறந்தநாள் பார்ட்டிகளிலும் பரிமாறப்படும் ஒரு சிறப்பு இனிப்பு வகை.

- Advertisement -

இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு இனிப்பு வகை. நாவில் வைத்தவுடன் கரைந்து அதீத சுவை தரும் இதன் தன்மையே இதற்குக் காரணம். இவை பெரும்பாலும் இந்திய துணைக் கண்டத்திலேயே செய்யப்படுகின்றது. ஆனால் இவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு செய்முறை யோடு மற்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதனை சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

Print
No ratings yet

பிரெட் பால் ரப்டி | Bread ball rabdi recipe in tamil

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் ரப்டியும் ஒன்று. ரப்ரி என்றும் அழைக்கப்படும் ரப்டி ஒரு உன்னதமான வட இந்திய விருந்தாகும், இது மிகவும் இனிமையானது. இந்த சுவையான ரெசிபி பண்டிகை காலங்களில் மட்டும் செய்யப்படுவதில்லை. சாதாரண நாட்களில் கூட இந்த இனிப்பு பலகாரம் செய்யப்படுகிறது. இந்த சுவையான பிரெட் ரப்டி பிரெட், பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி, முந்திரி மற்றும் பாதாம் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை டின்னருக்கு முன்னால் சாப்பிடும் ஸ்வீட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
Prep Time20 minutes
Active Time15 minutes
Total Time35 minutes
Course: Dessert
Cuisine: Indian, north india
Keyword: rabdi
Yield: 4 People
Calories: 96.7kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 வாணலி
  • 2 பவுள்

தேவையான பொருட்கள்

ரப்டி செய்ய

  • 1 லிட்டர் பால்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2 டீஸ்பூன் குங்குமப் பூ
  • 6 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 4 டேபிள் ஸ்பூன் பிரெட் க்ராம்ஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி

சர்க்கரை பாகு செய்ய

  • 1 கப் சர்க்கரை
  • 1 கப் தண்ணீர்                     
  • 1/4 டீஸ்பூன் குங்குமப் பூ
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

ஸ்டப்பிங் செய்ய

  • 4 ஸ்ட்ராபெரி
  • 1 வாழைப்பழம்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 6 பிரெட் துண்டுகள்
  • 4 டேபிள் ஸ்பூன் பிரெட் க்ராம்ஸ்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

ரப்டி செய்ய

  • முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். ஒரு லிட்டர் பால் அரை லிட்டர் அளவுக்கு சுண்டியதும் ஏலக்காய்த்தூள், குங்குமப் பூ, சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
  • பால் நன்கு சுண்டி கால் லிட்டருக்கு வரவும் சர்க்கரை மற்றும் பிரெட் கிராம்ஸ்ஸை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • இரண்டு நிமிடங்கள் கழித்து நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். பின் இதனை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

பாகு செய்ய

  • மற்றொரு கடாயை வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், குங்குமப் பூ சேர்த்து கொதிக்க விடவும்.
  • இது நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டப்பிங் செய்ய

  • பின் அதே கடாயில் நெய் விட்டு நறுக்கிய ஸ்ட்ராபெரி, சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து வதக்கி பவுளில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதன்‌பிறகு பிரெட் துண்டுகளின்‌ ஓரங்களை வெட்டி நாம் வதக்கி வைத்த பழத்தை உள்ளே வைத்து உருண்டைகளாக உருட்டி பின் பிரெட் கிராம்ஸில் உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்திருக்கும் பிரெட் உருண்டைகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
  • பிரட் உருண்டைகளை எண்ணெயில் பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்துக் கொள்ளவும்.
  • பொரித்து எடுத்த உருண்டைகளை நாம் தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பாகுவில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • இப்பொழுது ஒரு சிறிய பாத்திரத்தில் ரப்டி ஊற்றிக் கொள்ளவும். அதன் மீது ஊற வைத்துள்ள பிரட் உருண்டைகளை வைத்து பரிமாறவும்.
  • அவ்வளவுதான் சுவையான பிரட் பால் ரப்டி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 96.7kcal | Carbohydrates: 8.5g | Protein: 8g | Fat: 5.8g | Saturated Fat: 0.4g | Sodium: 7.1mg | Potassium: 12mg | Fiber: 0.2g | Calcium: 10mg