- Advertisement -
வித்தியாசமான துவையல் வகைகளில் சுட்ட கத்திரிக்காய் துவையலும் ஒன்று என்று கூறலாம். அந்த அளவிற்கு கத்திரிக்காய் வைத்து துவையல் செய்து செய்தால் அசந்துவிடுவார்கள். அதிலும் சுட்ட பின் செய்யும் சுட்ட கத்திரிக்காய் துவையல் தனித்துவம் உண்டு, நாக்கு அதை சாப்பிட ஏங்கும். டேஸ்டியான சுட்ட கத்திரிக்காய் துவையல் எப்படி ஈஸியாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவில் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
-விளம்பரம்-
சுட்ட கத்திரிக்காய் துவையல் | Brinjal Thuvayal Recipe In Tamil
வித்தியாசமான துவையல் வகைகளில் சுட்ட கத்திரிக்காய் துவையலும் ஒன்று என்று கூறலாம். அந்த அளவிற்கு கத்திரிக்காய் வைத்து துவையல் செய்தால்அசந்துவிடுவார்கள். அதிலும் சுட்டபின் செய்யும் சுட்ட கத்திரிக்காய் துவையல் தனித்துவம் உண்டு, நாக்கு அதை சாப்பிட ஏங்கும். டேஸ்டியான சுட்டகத்திரிக்காய் துவையல் எப்படி ஈஸியாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவில் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
Yield: 4
Calories: 60kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 கத்தரிக்காய் பெரியது
- 2 வெங்காயம்
- 2 டீஸ்பூன் வெள்ளை எள்
- 1 நெல்லிக்காயளவு புளி
- பெருங்காயம் சிறிதளவு
- கொத்தமல்லி தேவையான அளவு
- கறிவேப்பிலை தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- உளுத்தம் பருப்பு தேவையான அளவு
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 8 வெந்தயம்
- 4 மிளகாய் வற்றல்
- 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
செய்முறை
- கத்தரிக்காயை நன்கு கழுவி துடைத்து அதன்மேல் இலேசாக எண்ணெயைத் தடவவும். இதனை அப்படியே தோலோடு அடுப்பில் வைத்து சுட வேண்டும். மேல் தோல் நன்கு நிறம் மாறும் வரை வைத்து சுட்டு, காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உரித்தெடுக்கவும்.
- வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும். நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் எள், சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய், புளி, வெந்தயம் இவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நன்றாக அரைத்த பின் உளுத்தம் பருப்பைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து உப்பைச் சேர்க்கவும். கடுகு, பெருங்காயப் பொடியைசேர்த்து எண்ணெயில் தாளித்து கொட்டவும். சுவையான சுட்ட கத்தரிக்காய் துவையல் தயார்.
Nutrition
Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 37g | Protein: 19g | Fat: 2g | Cholesterol: 2mg | Sodium: 10mg | Potassium: 83mg | Fiber: 2g
- Advertisement -