வீட்டிலயே ஸ்நாக்ஸ் செய்ய ஐடியா இருந்தால் ருசியான ப்ரோக்கோலி கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. குழந்தைகளை மட்டுமல்ல ஒரு சில பெரியவர்களையும் காய்கறிகளை சாப்பிடு வைப்பது சற்று சவாலாகவே இருக்கும்.

-விளம்பரம்-

குறிப்பாக ப்ரோக்கோலி போன்ற ஒரு சில காய்கறிகளை குழந்தைகள் விரும்புவதில்லை. இந்நிலையில் ப்ரோக்கோலி குழந்தைகள் சாப்பிடும் வகையில் ஆரோக்கியமான ஒரு சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம். அடிக்கடி ஸ்நாக்ஸ் கேட்கும் குழந்தைகளை சமாளிப்பது சற்று கடினம் தான். ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் வகைகளை தவிர்த்து, பழங்கள், சுண்டல் மற்றும் இது போன்ற காய்கறி கட்லெட்களை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. இவை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேறு வேறு காய்கறிகளை சேர்த்து செய்கிறார்கள்.

- Advertisement -

இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். தற்போது ஆங்காங்கு மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. பொதுவாக குளிர்ச்சியான காலநிலையில் நல்ல காரசாரமாகவும், சூடாகவும், மொறுமொறுப்பாகவும் சாப்பிடத் தோன்றும். அதுவும் மாலை வேளையில் தான் இப்படியெல்லாம் தோன்றும். நீங்கள் எப்போதும் போல் எதாவது செய்யாமல் கட்லெட் செய்யுங்கள். அது தவிர திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக செய்வதற்கு ஏற்றது.

rajma cutlet
Print
No ratings yet

ப்ரோக்கோலி கட்லெட் | Broccoli Cutlet Recipe In Tamil

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. குழந்தைகளை மட்டுமல்ல ஒரு சில பெரியவர்களையும் காய்கறிகளை சாப்பிடு வைப்பது சற்று சவாலாகவே இருக்கும். குறிப்பாக ப்ரோக்கோலி போன்ற ஒரு சில காய்கறிகளை குழந்தைகள் விரும்புவதில்லை. இந்நிலையில் ப்ரோக்கோலி குழந்தைகள் சாப்பிடும் வகையில் ஆரோக்கியமான ஒரு சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Broccoli Cutlet
Yield: 4 People
Calories: 91kcal

Equipment

 • 1 பவுள்
 • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

 • 1 ப்ரோக்கோலி
 • 1 உருளைக்கிழங்கு   
 • 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
 • 1 பச்சை மிளகாய்
 • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
 • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
 • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 • உப்பு தேவையான அளவு
 • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
 • 2 டேபிள் ஸ்பூன் பிரெட் தூள்
 • கொத்தமல்லி தழை சிறிதளவு

செய்முறை

 • முதலில் ப்ரோக்கோலியை நன்கு அலசி விட்டு, வேக வைக்காமல் மசித்து அல்லது துருவி எடுத்துக் கொள்ளவும்.
 • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வேகவைத்து மசித்து கொள்ளவும்.
 • மசித்த ப்ரோக்கோலி மற்றும் உருளைக்கிழங்குடன் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சீரகத்தூள், மிளகு தூள் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 • அதன்பிறகு இதை சிறிதளவு எடுத்து வடை போல் தட்டி வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு பவுளில் சோள‌மாவை கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். பின் கட்லெட்டை சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
 • ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
 • அவ்வளவுதான் சுவையான ப்ரோக்கோலி கடலெட் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 91kcal | Carbohydrates: 6g | Protein: 8.5g | Fat: 2.3g | Sodium: 33mg | Potassium: 316mg | Fiber: 2.4g | Vitamin A: 31IU | Vitamin C: 86.2mg | Calcium: 47mg | Iron: 0.73mg

இதனையும் படியுங்கள் : ருசியான ப்ரோக்கோலி பீன்ஸ் கூட்டு இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்!!