சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட குடைமிளகாய் புளிக்குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

- Advertisement -

உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தபடும் மிளகாய் வகைகளில் குடமிளகாயும் ஒன்று. இது காய்கறிகளுக்கு சுவை மற்றும் மணம் தரும் வண்ணமயமான காய்களுள் ஒன்றாகவும், மிளகிற்கு நிகரான சுவை உடைய ஒன்றாகவும் உள்ளது. மேலும், சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு என பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த மிளகாய் அதிக காரம் இல்லாததாகவும் உள்ளது. நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த புளிக்குழம்பு.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான இறால் புளிக்குழம்பு இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். இது பெரும்பாலோனோர் பலவகையாக இந்த புளிக்குழம்பு செய்து சாப்பிடுவார்கள். வெங்காய புளிக்குழம்பு, கத்தரிக்காய், முருங்கைக்காய் புளிக்குழம்பு,என பல வகைகள் உண்டு. இந்த புளி குழம்பு புளிப்பும் காரமும் சேர்ந்து அட்டகாசமான சுவையைக் கொடுக்கும். இப்படி நிறைய நற்பண்புகளை உள்ளடக்கியுள்ள குடைமிளகாயில் எப்படி புளிக்குழம்பு செய்யலாம் என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

குடைமிளகாய் புளிக்குழம்பு | Capsicum Puli Kuzhambu

உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தபடும் மிளகாய் வகைகளில் குடமிளகாயும் ஒன்று. இது காய்கறிகளுக்கு சுவை மற்றும் மணம் தரும் வண்ணமயமான காய்களுள் ஒன்றாகவும், மிளகிற்கு நிகரான சுவை உடைய ஒன்றாகவும் உள்ளது. மேலும், சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு என பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த மிளகாய் அதிக காரம் இல்லாததாகவும் உள்ளது. நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த புளிக்குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian
Keyword: puli kulambu
Yield: 4 People
Calories: 39kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 2 குடைமிளகாய்
  • 1/2 கப் சின்னவெங்காயம்
  • 1/4 கப் பூண்டு
  • 2 தக்காளி
  • புளி எலுமிச்சைஅளவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  

தாளிக்க

  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி இலை சிறிதளவு
  • 2 வர மிளகாய்

செய்முறை

  • பச்சை குடைமிளகாய்,கழுவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு தோல் உரித்து, இஞ்சி மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வதக்கிய மிளகாயை எடுத்து தனியாக வைத்துவிட்டு, அதே எண்ணெயில் கடுகு, உளுந்து பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அது பொரிந்ததும் முழுசாக உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • அத்துடன் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.
  • மசாலா நன்கு வதங்கியதும், புளிக்கரைசலை சேர்த்து கலந்து, மேலும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • மேலே எண்ணெய் பிரிந்து வந்ததும், வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • கடைசியாக பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் பச்சை குடைமிளகாய் புளிக்குழம்பு தயார்.
  • இந்த புளிக்குழம்பு சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 39kcal | Carbohydrates: 9g | Protein: 15g | Fat: 0.5g | Sodium: 3mg | Potassium: 175mg | Fiber: 3.1g | Vitamin C: 80.4mg | Calcium: 10mg