அல்வா என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் ஏன் அல்வா என்றால் நமக்கும் மட்டுமில்ல தமிழக உள்ள அனைவருக்கும் ஞபகமாக வருவது திருநெல்வேலி இருட்டு கடை அல்வா வருவது அது அவ்வளவு சுவையாக இருக்கும். அதனால் இன்று அதே போல் வாயில் வைத்ததுமே கரைந்து போகும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் கேரட் அல்வா
இதையும் படியுங்கள் : தேங்காய் பால் கோதுமை அல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!
பற்றி தான் பார்க்க இருக்கிறோம். குழந்தைகளுக்கு வீட்டிலேயே இந்த அல்வா செய்து கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று தித்திக்கும் சுவையில் கேரட் அல்வா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கேரட் ஹல்வா | Carrot Halwa Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 tsp நெய்
- 8 முந்திரிப் பருப்பு
- 10 உலர்ந்த திராட்சை
- 5 கேரட் துருவியது
- 1 கப் பால்
- 1/2 கப் வெள்ளை சர்க்கரை
- 1/4 tsp ஏலக்காய் இடித்து பொடி செய்தது
- 2 tsp முலாம்பழ விதைகள்
செய்முறை
- முதலில் கடாயில் நெய் ஊற்றி, முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் துருவி எடுத்த கேரட்டை சேர்த்து ஒரு ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை வதக்கவும்.
- பின் எடுத்து வைத்த பால் சேர்த்து கலந்துவிட்டு ஒரு பத்து நிமிடம் கொதிக்க விடவும். அதோடு வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- இடித்து பொடி செய்த ஏலக்காயை சேர்த்து கலந்து விட்டு, பொரித்து எடுத்த முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, முலாம்பழ விதைகள் இவற்றை சேர்த்து கலந்து எடுக்கவும். ஒரு சுவையான, ஆரோக்கியமான கேரட் ஹல்வா தயார்.