பூனை குறுக்கே வந்தால் அபசகுணம் இல்லையா ? இவ்வேளா விஷயம் இருக்கா!

ஆன்மிகம்
- Advertisement -

நான் முன்னோர்கள் கட்டுரை வடிவில் விளக்கம் கொடுக்கக்கூடிய ஒரு விஷயத்தை ஒரு சில பழமொழி வடிவிலான வார்த்தைகளில் நமக்கு கூறி வந்தனர் ஆனால் நாம் அதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல். இன்றளவும் கூட பேச்சு வார்த்தைகளில் பல மூட நம்பிக்கைகள் போன்ற விஷரங்களை கடைபிடித்து வருகின்றோம். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் நம் முன்னோர்கள் அந்த காலத்தில் மாட்டு வண்டி குதிரை வண்டியை மட்டும் தான் போக்குவரத்து வாகனமாக பயன்படுத்தி வந்தார்கள்.

-விளம்பரம்-

எலுமிச்சை பழம்

அப்படி நாம் செல்லும் போது காடு, மேடு, சகதி என மாடுகள், குதிரைகள் அனைத்து இடங்களிலும் பயனப்படுவதன் காரணமாக அதன் குழம்பு பகுதியில் பாக்டீரியாக்கள் கிருமிகள் தொற்று ஏற்பட்டு புண்ணாக மாறிவிடும். அதை சரி செய்வதற்காக எப்பொதும் வெளியே புறப்படும் பொழுது எலுமிச்சம் பழத்தை வைத்து அதை மாடு குதிரைகளை மிதிக்க செய்வார்கள். ஆனால் நாம் அதன் பின்னாடி இருக்கும் அறிவியல் பூர்வமாண காரணத்தை புரிந்து கொள்ளாமல் இன்று பைக், கார், கனரக வாகனங்கள் என ஏதில் பயணம் செய்தாலும் அதன் டயர் அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து ஏற்றி செல்கிறோம் இதுவே மிகப்பெரிய உதாரணம்.

- Advertisement -
CAT

பூனை வந்த திசையில் போக்கூடாது

அந்த வகையில் தான் இன்றளவும் நாம் நல்ல காரியங்களுக்கு வெளியே செல்லும் பொழுது அல்லது வீட்டை விட்டு வேலைக்கு செல்லும் பொழுது பூனை குறுக்கே வந்து விட்டால் அது அபசகுணம் என்றும் சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்லுங்கள் என்று கூறுவார்கள். நான் மேலே சொன்னது போலவே இதற்கு பின்னும் ஒரு மிகப்பெரிய காரணம் இருக்கின்றது அது என்னவென்றால் முன்பெல்லாம் மன்னர்கள் காலத்தில் அடிக்கடி பக்கத்து நாடுகளுடன், தொலைதூர அண்டை நாடுகளுடன் எல்லாம் மாதக்கணக்கில் ஏன் வருட கணக்கில் கூட போர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அப்பொழுது அவர்கள் படை செல்லும் வழியில் பூனை குறுக்காக வந்தால் அந்த வழியில் செல்லக்கூடாது என்று வேறு வழியில் படைகளை கூட்டி செல்வார்கள். அதற்கு காரணம் பூனைகளை குடியிருப்பு இருக்கும் பகுதிகளில் தான் வளர்த்து வருவார்கள்.

WAR

உண்மை காரணம்

அதனால் அந்த வழியில் குடியிருப்பு பகுதிகள் இருக்கிறது என்றும் அந்த வீட்டில் உள்ள பெரும்பாலான ஆண் மகன்கள் போரில் பங்கு பெற்றுக் கொண்டிருப்பார்கள் அதனால் அங்கு இருக்கும் பெண்கள் குழந்தைகளுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக பூனைகள் இருக்கும் திசையை பார்த்து கணித்து விடுவார்கள். அதன் பின் படையை வேறு திசையில் செலுத்துவார்கள் ஒரு படை என்று எடுத்துக் கொண்டால் அதில் என்னென்ன அடங்கும் என்பது உங்களுக்கே தெரியும். குதிரைப்படை, காலர் படை, அதிலும் முக்கியமாக நாம் தமிழ் மன்னர்கள் யானை படையை கூட வைத்திருந்தார்கள். இந்த படையெல்லாம் குடியிருப்பு இருக்கும் பகுதிகளில் சென்றால் அங்கு குடியிருக்கும் குடும்பங்களின் நிலைமை என்னாகும். இதை அறிந்த படைகள் போகும் போது குறுக்கே பூனைகள் வந்தால் அந்த திசையில் செல்லக்கூடாது என்பதை இவ்வாறு சொல்லி வந்தார்கள் இதுவே காலப்போக்கில் பூனை குறுக்கே வந்தால் அபசகுணம் என்று கூறி நாம் தவறாக புரிந்து கொண்டு வருகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here