காரசாரமான ருசியில் காலிஃபிளவர் குடைமிளகாய் பொரியல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

பொரியல் இல்லாமல் உங்கள் வீட்டில் மதிய சாப்பாடு யாருக்கும் இறங்காதா? தினமும் உங்க வீட்டில் பொரியல் செய்வீங்களா? இன்னைக்கு என்ன பொரியல் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் குடைமிளகாய், காலிஃபிளவர் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாய்‌ மற்றும் காலிஃபிளவர் கொண்டு அசத்தலான சுவையில் ஒரு பொரியலை செய்யுங்கள். இந்த குடைமிளகாய் காலிஃபிளவர் பொரியல் சாம்பார், புளிக்குழம்பு என்று அனைத்திற்கு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிலும் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. எனவே இதை சமைத்து சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எளிதில் வயதான தோற்றத்தை தருவதையும் தடுக்கும். இதனால் உடலில் ஈரப்பதமும் அதிகரிக்கும்.

-விளம்பரம்-

குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. இத்தகைய பயன்கள் நிறைந்துள்ள குடைமிளகாயை வைத்து ஒரு பொரியல் செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் போகும் அளவிற்கு அற்புதமான சுவையுடன் இருக்கும். வாரம் ஒரு முறை இந்த குடைமிளகாய் பொரியலை செய்து கொடுங்கள். அடுத்த நாளைக்கு என்ன பொரியல் செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த குடைமிளகாய் காலிஃபிளவர் பொரியல் செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் பிடிக்கும்.

- Advertisement -
Print
No ratings yet

காலிஃபிளவர் குடைமிளகாய் பொரியல் | Cauliflower Capsicum Poriyal Recipe In Tamil

பொரியல் இல்லாமல் உங்கள் வீட்டில் மதிய சாப்பாடு யாருக்கும் இறங்காதா? தினமும் உங்க வீட்டில் பொரியல் செய்வீங்களா? இன்னைக்கு என்ன பொரியல் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் குடைமிளகாய், காலிஃபிளவர் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாய்‌ மற்றும் காலிஃபிளவர் கொண்டு அசத்தலான சுவையில் ஒரு பொரியலை செய்யுங்கள். இந்த குடைமிளகாய் காலிஃபிளவர் பொரியல் சாம்பார், புளிக்குழம்பு என்று அனைத்திற்கு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. இத்தகைய பயன்கள் நிறைந்துள்ள குடைமிளகாயை வைத்து ஒரு பொரியல் செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் போகும் அளவிற்கு அற்புதமான சுவையுடன் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Cauliflower Capsicum Poriyal
Yield: 4 People
Calories: 47kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 காலிஃப்ளவர்
  • 2 குடைமிளகாய்
  • 3 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் தக்காளி விழுது
  • 2 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கறி மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு

செய்முறை

  • முதலில் காலிஃபிளவரை நறுக்கி சூடான தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் அலசி வெளியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் குடைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் மஞ்சள் தூள், உப்பு, மல்லித்தூள், சாம்பார் பொடி, சீரகத்தூள், கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின் சுத்தம் செய்த காலிஃபிளவர் குடைமிளகாய் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக வைத்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான காலிஃபிளவர் குடைமிளகாய் பொரியல் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 47kcal | Carbohydrates: 5.3g | Protein: 3.2g | Fat: 1.2g | Sodium: 32mg | Potassium: 299mg | Fiber: 2.1g | Vitamin A: 16IU | Vitamin C: 46.4mg | Calcium: 22mg | Iron: 4.2mg

இதனையும் படியுங்கள் : ப்ரோக்கோலி பொரியல் இப்படி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்!!!