நாவில் எச்சி ஊறும் சென்னா மசாலா சாட் இப்படி ரெம்ப ஈஸியாக செய்து பாருங்கள்!

- Advertisement -

கொண்டைக்கடலை சாட் ஒரு நொடியில் எளிதாக செய்யக் கூடிய மற்றும் கொஞ்ச நேரத்தில் பசியைப் போக்க கூடிய சரியான உணவாகும். அதேசமயம் நீங்கள் அதில் சரியான மசாலா மற்றும் பொருட்களைச் சேர்த்தால் மட்டுமே சுவையை அதிகரிக்க முடியும். நீங்கள் உடல் எடையை குறைக்கும் நோக்கத்தில் இருந்தால் இது சிறந்த உணவாக அமையும். கொண்டைக்கடலை மற்ற பருப்பு வகைகளை விட அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுக்களின் களஞ்சியமாக உள்ளது. அதனால் நமது உடல் எடையைக் குறைக்க ஒரு சுவையான வழியாகும். தெருவோர கடைகளில் இந்த ரெசிபி மிகவும் புகழ் பெற்றது. காரசாரமான மசாலா பொருட்களைத் தூவி அப்படியே கருப்பு கொண்டைக்கடலையுடன் சேர்த்து சாப்பிடும் போது இது மிகவும் சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

அதிலும் உங்கள் தேநீர் இடைவேளைக்கு மிகவும் பொருத்தமான காம்பினேஷன் இது. உங்கள் குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் பேசிக்கிட்டே உட்கார்ந்து சேர்ந்து சாப்பிடவும் அருமையான ஸ்நாக்ஸ் ஆக இருக்கும். பொதுவாக சாட் வகைகளில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், மற்ற ஊட்டச்சத்துகள் நிறைவாகவும் இருக்கும். இந்த சாட்டிலும் பல்வேறு சத்தான பண்புகளைக்கொண்ட மற்றும் புரதம் நிறைந்த கொண்டைக்கடலை மற்றும் நார்ச்சத்துக்காக வெள்ளரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளைச் சேர்த்துள்ளதால் இது காலை உணவுக்கு ஏற்றதாகும். இது வழக்கமாக நாம் சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. வாருங்கள்! ருசியான சென்னா மசாலா சாட்டை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
No ratings yet

சென்னா மசாலா சாட் | Channa Masala chaat Recipe In Tamil

கொண்டைக்கடலை சாட் ஒரு நொடியில் எளிதாக செய்யக் கூடிய மற்றும் கொஞ்ச நேரத்தில் பசியைப் போக்க கூடிய சரியான உணவாகும். அதேசமயம் நீங்கள் அதில் சரியான மசாலா மற்றும் பொருட்களைச் சேர்த்தால் மட்டுமே சுவையை அதிகரிக்க முடியும். நீங்கள் உடல் எடையை குறைக்கும் நோக்கத்தில் இருந்தால் இது சிறந்த உணவாக அமையும். கொண்டைக்கடலை மற்ற பருப்பு வகைகளை விட அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுக்களின் களஞ்சியமாக உள்ளது. அதனால் நமது உடல் எடையைக் குறைக்க ஒரு சுவையான வழியாகும். தெருவோர கடைகளில் இந்த ரெசிபி மிகவும் புகழ் பெற்றது. காரசாரமான மசாலா பொருட்களைத் தூவி அப்படியே கருப்பு கொண்டைக்கடலையுடன் சேர்த்து சாப்பிடும் போது இது மிகவும் சுவையாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Channa Masala Chaat
Yield: 3 People
Calories: 210kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் கொண்டைக்கடலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கப் வெள்ளரிக்காய்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் கொண்டைக்கடலையை சிறிதளவு தண்ணீர் விட்டு ஐந்து மணி நேரம் வரை ஊற வைத்து பின் குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் வெங்காயம், தக்காளி, மல்லி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் பின் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு வேகவைத்த கடலையை சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி இதனுடன் மல்லி இலை, வெங்காயம், உப்பு, எலுமிச்சை சாறு, ஓமப்பொடி தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான சென்னா மசாலா சாட் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 210kcal | Carbohydrates: 3.5g | Protein: 10.7g | Fat: 3.8g | Sodium: 29mg | Potassium: 47mg | Fiber: 3.6g | Vitamin A: 27IU | Vitamin C: 40mg | Calcium: 49mg | Iron: 4.74mg

இதனையும் படியுங்கள் : சுவையான தஹி பப்டி சாட் இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!