Advertisement
Uncategorized

சுவையான செட்டிநாடு ஸ்டைல் வெஜிடபிள் குருமா இப்படி செய்து பாருங்கள் உடனே அனைத்தும் காலியாகிவிடும்!!!

Advertisement

நீங்கள் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? உங்கள் வீட்டிலும் செட்டிநாடு ஸ்டைலில் சமைக்க விரும்புகிறீர்களா? இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக குருமா இருந்தால் நன்றாக இருக்கும். அதுவும் செட்டிநாடு வெஜிடேபிள் குருமா செய்தால் இன்னமும் அட்டகாசமாக இருக்கும் அல்லவா? ஆகையால் இந்த பதிவில் செட்டிநாடு குருமா எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த குருமா செய்வது மிகவும் சுலபம். ஏன் பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும். மேலும் இது அனைவரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் சுவையாகவும் இருக்கும்.

முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இட்லி, தோசை என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தான் செய்ய வேண்டும். அதேபோல் சப்பாத்தி, பூரி என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கு, சென்னா மசாலா இதை தான் செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறான அனைத்து விதமான உணவுகளுடன் சாப்பிட மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் ஒரு உணவுப் பொருள் என்றால் அது குருமா மட்டும் தான். இதனை ஒரு முறை செய்து பாருங்கள், இதன் ருசிக்கு அனைவரும் அடிமை ஆகி விடும் அளவிற்கு இதன் சுவை மிக பிரமாதமாக இருக்கும். காலை உணவாக இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என செய்தாலும் குருமாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுவையே தனி தான். அந்த வகையில் செட்டிநாடு வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Advertisement

செட்டிநாடு வெஜிடபிள் குருமா | Chettinad Vegetable Kurma Recipe In Tamil

Print Recipe
நீங்கள் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? உங்கள் வீட்டிலும் செட்டிநாடு ஸ்டைலில் சமைக்க விரும்புகிறீர்களா? இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக குருமா இருந்தால் நன்றாக இருக்கும். அதுவும் செட்டிநாடு வெஜிடேபிள் குருமா செய்தால் இன்னமும் அட்டகாசமாக இருக்கும் அல்லவா? ஆகையால் இந்த பதிவில் செட்டிநாடு குருமா எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த குருமா செய்வது மிகவும் சுலபம். ஏன் பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும். மேலும் இது அனைவரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் சுவையாகவும் இருக்கும்.
Advertisement
Course dinner
Cuisine Indian, TAMIL
Keyword Chettinad Vegetable Kurma
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 238

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்

Ingredients

  • 1 உருளைக்கிழங்கு
  • 1 கேரட்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 12 முந்திரி
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்

அரைக்க :

  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 3 காஷ்மீர் மிளகாய்
  • 3 வர‌ மிளகாய்

Instructions

  • முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் நன்கு அலசி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளை மற்றும் கேரட்டை தோல் நீக்கி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.‌
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து லேசாக வறுத்து ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், முந்திரி சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்.
  • பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் காய்கறிகளை சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் பொடித்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
  • பின் குக்கரை திறந்து கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூவி கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு வெஜிடபிள் குருமா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 238kcal | Carbohydrates: 3.9g | Protein: 9.1g | Fat: 2.3g | Sodium: 97mg | Potassium: 258mg | Fiber: 7.5g | Vitamin A: 64IU | Vitamin C: 284mg | Calcium: 99mg | Iron: 7.21mg

இதனையும் படியுங்கள் : அட்டகாசமான ருசியில் செட்டிநாடு பன்னீர் கிரேவி இப்படி செய்து பாருங்க! சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு பக்காவான கிரேவி!

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 03 ஜூலை 2024!

மேஷம் இன்று உங்கள் உடன்பிறப்புகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களுக்கு ஏமாற்றம் தரும் நாளாக இருக்கும். உங்கள் இல்லற வாழ்வில்…

2 மணி நேரங்கள் ago

கருங்காலி மாலை அணிவதன் பலன்கள்

கருங்காலி மாலை அணிவது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. சக்தி வாய்ந்த இந்த மாலையை பலர் அணிந்திருந்தாலும், சமீபத்தில் லோகேஷ்…

11 மணி நேரங்கள் ago

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு லட்டு பிடிக்குமா ? அப்படியானால் இனி வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் லட்டு செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!

இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன.…

19 மணி நேரங்கள் ago

சத்து நிறைந்த கோதுமை வெல்ல தோசை ஒரு இப்படி செய்து பாருங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!!

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்…

22 மணி நேரங்கள் ago

ஜூலை மாத ராசிபலன் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதம் பல சவால்களை எதிர் கொள்வீர்கள் மற்றும் கடினமாக உழைப்பீர்கள். உங்களுக்கு பல வழிகளில்…

1 நாள் ago

சுவையான மற்றும் சத்தான சேனைக்கிழங்கு தவா ரோஸ்ட் இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!!

கிழங்கில் சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரை வல்லிக் கிழங்கு, மரவல்லிக் கிழங்கு என்று வகைகள் உள்ளன. ஒவ்வொரு கிழங்கும் ஒரு தனித்துவமான…

2 நாட்கள் ago