ருசியான நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
கோயம்புத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கன் சிந்தாமணியும் ஒன்று. நம்மில் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக் கொள்வது ஊறுக்காய், உருளைக்கிழங்கு வறுவல் அதிகபட்சமாக சிப்ஸ். ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணியை செய்வார்களாம். அந்த அளவுக்
கோயம்புத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கன் சிந்தாமணியும் ஒன்று. நம்மில் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக் கொள்வது ஊறுக்காய், உருளைக்கிழங்கு வறுவல் அதிகபட்சமாக சிப்ஸ். ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணியை செய்வார்களாம். அந்த அளவுக்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லா வகையான உணவுகளுக்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது.
இதனையும் படியுங்கள் : வாழைஇலை சிக்கன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!
இதில் மசாலா பொடி எதுவும் சேர்க்காமல் காரம் மட்டும் தூக்கலாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் சேர்க்கும் மிளகாயின் சுவை. சிக்கன் என்றாலே சூடு என்பார்கள். ஆனால், சிக்கன் சிந்தாமணி மட்டும் உடலுக்கு சூடே கிடையாது. காரணம் அதை மண் சட்டியில், நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஊற்றி சமைப்பார்கள். ஈரோடுவாசிகள் சிக்கன் சிந்தாமணியை மிளகாய் கறி எனவும் அழைப்பார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.