சுவையான ஒரு கோழி கால் பாயா நிமிஷத்துல ரெடி பண்ணிடலாம். இது ஆட்டுக்கால் பாயா இல்லன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. டேஸ்ட் அப்படி இருக்கும்!!!

- Advertisement -

ஆட்டுக்கால் பாயா அப்படின்னா எல்லாருக்குமே பிடிக்கும். இடியாப்பத்தோடு ஆட்டுக்கால் பாயா சாப்பிடணும் அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சமான ஒரு விஷயமா இருக்கும். ஆனால் இன்னைக்கு நம்ம கோழியோட கால்களை வச்சு பாயா செய்தா எப்படி இருக்கும் அப்படின்னு யோசிச்சு செய்தது இந்த கோழிக்கால் பாயா.

-விளம்பரம்-

 இந்த கோழிகால் பாயாவும் ஆட்டுக்கால் பாயாவவிட ரொம்பவே சுவையா இருக்கும். ஆனால் நிறைய டைம் செய்வதற்கு எடுத்துக்காது கோழி சீக்கிரமா வேகக்கூடிய ஒரு பொருள் அதனால சிக்கன்ல  பாயா செய்யும்போது இந்த ஆட்டோட கால்களை வாட்டி சுத்தம் பண்ணி செய்ற மாதிரி எந்த ஒரு கஷ்டமான வேலையவே கிடையாது. ரொம்ப சுலபமாக கோழி கால்களை கடைகள் உடனே வாங்கி கொடுத்துடுவாங்க.

- Advertisement -

அதை வாங்கிட்டு வந்து இருக்க மாதிரி சுத்தமா கழுவிட்டு அப்படியே செய்ய வேண்டியது தான். அதனால இந்த கோழிக்கால் பாயா ரொம்ப சுவையாக எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் கோழி கால்ல செய்யறதுனால ரொம்பவே வித்தியாசமான ஒரு உணவா இது இருக்கும். காரணம் எப்போது ஆட்டுக்கால் பாய் ஆட்டுக்கால் பாய் என்று கேட்டு சாப்பிட்டு பழகுன நமக்கு கோழிக்காலில் பாயா செய்து இருக்காங்களா அப்படிங்கற ஒரு எண்ணம் வரும்.

வீட்ல இருக்குறவங்க எல்லாருமே ரொம்பவே வித்தியாசமா பாப்பாங்க ஆனால் டேஸ்ட் சாப்பிட்டு ரொம்பவே நல்லா இருக்கு அப்படின்னு வந்து ரொம்பவே சந்தோஷமா சாப்பிடுவாங்க. சுவையான ரொம்ப ரொம்ப ருசியான இந்த கோழிகால் பாயாவை வீட்ல எப்படி சுலபமாக செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

கோழி கால் பாயா | Chicken Leg Paaya Recipe In Tamil

கோழிகால் பாயாவும் ஆட்டுக்கால் பாயாவவிட ரொம்பவே சுவையா இருக்கும். ஆனால் நிறைய டைம் செய்வதற்கு எடுத்துக்காது கோழி சீக்கிரமா வேகக்கூடிய ஒரு பொருள் அதனால சிக்கன்ல  பாயா செய்யும் போது இந்த ஆட்டோட கால்களை வாட்டி சுத்தம் பண்ணி செய்ற மாதிரி எந்த ஒரு கஷ்டமான வேலையவே கிடையாது. ரொம்ப சுலபமாக கோழி கால்களை கடைகள் உடனே வாங்கி கொடுத்துடுவாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Chicken Leg Paaya
Yield: 4
Calories: 91kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 4 கோழி கால்கள்
 • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
 • 1 வெங்காயம்
 • 1 பிரியாணிஇலை
 • 2 அன்னாசி பூ
 • 2 ஜாதிபத்ரி
 • 4 பச்சைமிளகாய்
 • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 • 1 ஸ்பூன் சீரகதூள்
 • 1 ஸ்பூன் மல்லிதூள்
 • 1 ஸ்பூன் சோம்பு
 • 4 ஸ்பூன் தயிர்
 • 1 கைப்பிடி புதினா, கொத்தமல்லி
 • 1 கப் காய்ச்சிய பால்
 • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
 • 10 முந்திரிபருப்பு
 • கொத்தமல்லி சிறிதளவு
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

 • முதலில் கோழி காலை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், அன்னாசிப்பூ பிரியாணி இலை, ஜாதிபத்ரி , எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • பிறகு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.அப்பொழுது இதில் சீரகத்தூள், மல்லித்தூள், சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
 • பின்பு அதில் சோம்பு சேர்த்து கலந்து விட்டு தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
 •  இப்பொழுது ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக்கொண்டு அந்த விழுதையும் தயிரில் கலந்த பிறகு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
 • இப்பொழுது அதில் காய்ச்சி வைத்துள்ள பாலை சேர்த்து நன்றாக கிளறி விடவும் பாலை சேர்த்த பிறகு கொதி வந்ததும்.  அதில்  சுத்தம் செய்து  எடுத்துவைத்துள்ள கோழி கால்களை , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு மசாலாவுடன் கொதிக்க விடவும்.
 •  இப்பொழுது அதில் மிளகுத்தூள், அரைத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு விழுது சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொதி வந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ருசியான கோழி கால் பாயா தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Fiber: 4g

இதையும் படியுங்கள் : ஒரு முறை சிக்கன் வாங்கி இப்படி ருசியான சிக்கன் உப்பு கறி ட்ரை பண்ணி பாருங்க அசத்தலான சுவையில் இருக்கும்!

-விளம்பரம்-