- Advertisement -
சாக்லேட், ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து செய்யும் இந்த சாக்லேட் சமோசா வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகளில் ஒன்று. இது மிகச்சிறந்த வட இந்திய சிற்றுண்டி ஒரு இனிப்பாக உள்ளது! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, சுவையான சாக்லேட் ஃபில்லிங் கொண்ட சமோசா, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விழாக் காலங்களில் நீங்கள் செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சாக்லேட் சமோசாவை இனிப்பாகவோ அல்லது தீபாவளி விருந்துக்கு ஸ்வீட் ஸ்நாக்காகவோ தயார் செய்யலாம். இதனை உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு அளித்தால் கடைசி வரை உங்கள் விருந்தினர்கள் உல்லாசமாக இருப்பதைக் காணலாம்.
-விளம்பரம்-
சாக்லேட் சமோசா | Chocolate Somasa Recipe In Tamil
சாக்லேட், ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து செய்யும் இந்த சாக்லேட் சமோசா வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகளில் ஒன்று. இது மிகச்சிறந்த வட இந்திய சிற்றுண்டி ஒரு இனிப்பாக உள்ளது! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, சுவையான சாக்லேட் ஃபில்லிங் கொண்ட சமோசா, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விழாக் காலங்களில் நீங்கள் செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சாக்லேட் சமோசாவை இனிப்பாகவோ அல்லது தீபாவளி விருந்துக்கு ஸ்வீட் ஸ்நாக்காகவோ தயார் செய்யலாம்.
Yield: 4 People
Calories: 216kcal
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 வாணலி
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1/2 கப் மைதா
- 1/4 டீஸ்பூன் உப்பு
- 1/4 கப் நெய்
- 1/4 கப் ரவா
- 1/4 கப் தேங்காய்
- 1/4 கப் பொட்டுக்கடலை
- 1 டேபிள் ஸ்பூன் பாதாம்
- 1 டேபிள் ஸ்பூன் பிஸ்தா
- 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
- 1/4 டீஸ்பூன் ஏலக்காய்
- 100 கிராம் சாக்லேட்
- எண்ணெய் தேவையானஅளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிதளவு உப்பு, நெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
- இந்த மாவை 10 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைத்து விடவும்.
- பின் ஒரு கடாயில் நெய் விட்டு ரவாவை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து ஒரு பவுளில் எடுத்து வைக்கவும்.
- பின்னர் அதே கடாயில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை உருக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
- பின்னர் ரவாவுடன் பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், சர்க்கரை, பாதாம், பிஸ்தா, ஏலக்காய் தூள் மற்றும் உருக்கிய சாக்லேட் சேர்த்து கலந்து விடவும்.
- மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து அதனை முக்கோன வடிவில் சுருட்டி கொள்ளவும்.
- அதனுள் உருக்கி வைத்த சாக்லேட் கலவையை போட்டு சமோசாவில் ஓரங்களில் தண்ணீர் கொண்டு அதன் முனைகளை ஒட்டி வைக்கவும்.
- அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான சாக்லேட் சமோசா ரெடி.
Nutrition
Serving: 600g | Calories: 216kcal | Carbohydrates: 25g | Protein: 1.8g | Fat: 13.6g | Saturated Fat: 6.7g | Sodium: 79mg | Potassium: 372mg | Fiber: 2.6g | Sugar: 7.1g | Vitamin A: 195IU | Calcium: 6.5mg | Iron: 0.6mg
- Advertisement -