சிக்கல்களை ஏற்படுத்தும் அந்தப் பிரச்சினையை சரிசெய்தால் ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம்!

- Advertisement -

மலச்சிக்கல்… இது பல சிக்கலுக்கு வழிவகுக்கும். இன்னைக்கு சூழல்ல பல பேருக்கு இருக்கிற பிரச்சினை மலச்சிக்கல். மலச்சிக்கல் வர்றதுக்கு காரணம் என்னன்னா மாறிவிட்ட உணவுப் பழக்கங்கள்தான். நாம மருத்துவர்கள்கிட்ட போனதும் முதல்ல மலச்சிக்கல் பிரச்சினை இருக்கான்னுதான் கேப்பாங்க. ஆனா நம்மள்ல பலபேர் அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லயேன்னு சொல்வோம். மலச்சிக்கல் இருக்குன்னு சொன்னா அது கவுரவக் குறைச்சல்னு நினைச்சிட்டு பலபேர் அதைப் பத்தி வெளிய பேசுறது இல்லை. ஆனா, கொஞ்சம் நேரம் பேசிப்பார்த்தாதான் மலச்சிக்கல் பிரச்சினை இருக்குங்கிறது தெரியும்.

-விளம்பரம்-

டைபாய்டு குடல் புற்று நோய்

மலச்சிக்கல் இல்லாமப் பார்த்துக்கிட்டாலே பல நோய்கள்… குறிப்பா பெரிய பெரிய நோய்கள் வராம பாதுகாத்துக்கிடலாம். நீண்ட நாள் மலச்சிக்கல் இருந்தா அது அடிவயித்துல தேங்கி அதாவது குடல்ல தேங்கி குடல் காய்ச்சல்னு சொல்லக்கூடிய டைபாய்டு காய்ச்சல் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அதே மாதிரி சில பேருக்கு காரணமே இல்லாம திடீர்னு வாந்தி பேதி வரும். இன்னும் சொல்லப்போனா குடல் புற்று நோய் வர்றதுக்குக்கூட வாய்ப்பு இருக்கு. இந்த மாதிரி பல பிரச்சனைகள் வராம இருக்கணுன்னா மலச்சிக்கல் இல்லாமப் பாத்துக்கிடணும்.

- Advertisement -

உமிழ்நீர் சுரக்க வேண்டும்

மலச்சிக்கலை எப்படி சரி பண்றதுன்னு பார்த்தோம்னா… முதல்ல நாம சாப்பிடக்கூடிய சாப்பாட்டு மூலமா சரி பண்றதுதான் நல்லது. ஆனா, இன்னைக்கு நாம சாப்பிடக்கூடிய சாப்பாடு எல்லாமே தப்பும் தவறுமாதான் இருக்கு. அதாவது வெந்தது வேகாததுன்னு ரெண்டையும் ஒண்ணா சேர்த்துத்தான் சாப்பிடுறோம். அதே மாதிரி உமிழ்நீரை சுரக்க வச்சு சாப்பிடுறதுக்கு யாருக்கும் நேரமில்லை. இந்த அவசர உலகத்துல வேகம் வேகமா சாப்பிடுறோம். வீட்டுச் சமையல் குறைஞ்சு போச்சு, அதனால சாப்பாட்டுல மருத்துவமும் குறைஞ்சு போச்சு. கிடைச்சதை வாங்கி சாப்பிடுறதாலதான் இந்தப் பிரச்சினை எல்லாமே.

இட்லி இடியாப்பம்

இட்லி, இடியாப்பம், புட்டு, கஞ்சின்னு நாம சாப்பிட்டு வந்த உணவு முறையெல்லாம் இப்போ குறைஞ்சு போச்சு. பூரி, பாஸ்தா, நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ்னு உணவு முறைகள் மாறிப்போனதால நமக்கு பல சிக்கல்கள் உருவாகுது. அதனால முதல்ல உணவு முறைகளை மாத்தணும். முக்கியமா பழங்களை அதிகமா சாப்பிட்டு வந்தாலே மலச்சிக்கலை சரி பண்ணிட முடியும். ஆனா அதையும் நம்ம யாரும் சரியா சாப்பிடுறது இல்ல. சாப்பாடு சாப்பிட்டதும் பழங்கள் சாப்பிடக்கூடாது. ஒரு மணி நேரம் இல்லன்னா ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியோ சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழிச்சோதான் பழம் சாப்பிடணும். ஒரு வேளை உணவு பழமாக இருந்தாலும் நல்லது. காய்ஞ்ச திராட்சைப்பழத்தை அடிக்கடி சாப்பிடலாம்.

கீரை பூண்டுக்குழம்பு

கீரைகள்… முக்கியமா முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே மலச்சிக்கல் பிரச்சினை வராது. வெந்தயம் சாப்பிடலாம். ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வாயில போட்டு தண்ணி குடிச்சா காலையில தாராளமா மலம் போகும். பூண்டுக் குழம்பு, பூண்டுத் துவையல், இஞ்சித் துவையல், பிரண்டைத் துவையல்னு உணவு முறையை கொஞ்சம் மாற்றினாலே போதும். சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் சாப்பிடலாம். சாப்பாட்டுக்குப் பிறகு சீரகத் தண்ணி குடிக்கலாம். இல்லன்னா ஒரு ஸ்பூன் சீரகத்தை லேசா வறுத்து பொடியாக்கி முதல் உணவோட சேர்த்துச் சாப்பிட்டாலும் பிரச்சனை இல்லாம பார்த்துக்கிடலாம்.

-விளம்பரம்-

கடுக்காய் கசாயம்

காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய்னு சித்தர்கள் சொல்லி இருக்காங்க. அதாவது காலை நேரத்துல இஞ்சிச் சாறு குடிக்கலாம், சாய்ங்கால வேளையில சுக்கு காபி குடிக்கலாம், ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி கடுக்காய் கசாயம் குடிக்கலாம். இதேமாதிரி திரிபலா சூரணத்தையும் சாப்பிடலாம். பாரம்பரிய அரிசிகள், கேழ்வரகு, தினை, வரகு மாதிரியான சிறுதானியங்களை உணவுல சேர்த்துக்கிடுறது நல்லது. நார்ச்சத்து நிறைஞ்ச உணவுகளை அதிகமா எடுத்துக்கிடுறது நல்லது. மொச்சை, கொண்டக்கடலை, வாழைத்தண்டு, பச்சை நிற காய்கறிகளை அதிகமா சாப்பிடுறது நல்லது.

மலச்சிக்கலுக்கு மருந்து

காபி, டீ குடிக்கிறதை குறைச்சிட்டு இளநீர், பழ ஜூஸ்கள் குடிக்கிறது நல்லது. அதேமாதிரி இனிப்பு பண்டங்கள், கொழுப்பு அதிகமா உள்ள உணவுகளை குறைச்சிக்கிடுறது நல்லது. இது எல்லாத்துக்கும் மேல நிறைய தண்ணி குடிக்கணும். சாப்பாட்டை நல்லா மென்னு உமிழ்நீரோட சேர்த்து விழுங்கணும். தீராத மலச்சிக்கல் இருந்தா விளக்கெண்ணெய்… அதாவது ஆமணக்கு எண்ணெயை வெந்நீர்ல கலந்து குடிச்சா மலம் தாராளமா போகும். நிலாவரை சூரணம் சாப்பிடலாம். இல்லனா அகத்தியர் குழம்புன்னு ஒரு சித்த மருந்து இருக்கு. அதுல மிளகு அளவு எடுத்து அதிகாலையில வெறும் வயித்துல சாப்பிட்டு வெந்நீர் குடிச்சா மலச்சிக்கல் சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here