- Advertisement -
மாலை வேலையில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட மொறு மொறுனு மக்காசோள பக்கோடா இது போன்று செய்து சுவைத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க.
-விளம்பரம்-
எப்படி இந்த பக்கோடா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
மக்காசோள பக்கோடா | Corn Pakoda Recipe In Tamil
மாலை வேலையில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட மொறு மொறுனு மக்காசோள பக்கோடா இது போன்று செய்து சுவைத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த பக்கோடா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 1 வேக வைத்து உரித்த மக்காசோளம்
- 1 கப் புதினா
- 2 கப் அரிசி மாவு
- 5 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி சிறியது
- 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் புதினாவை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். உரித்த மக்காசோளத்தை மிக்சியில் போட்டு,ஒன்றுக்கு இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து இந்த இரண்டு கலவையையும், அரிசி மாவில் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
- இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
- பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்திற்கு பிசையவும்.
- அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடான உடன், அதில் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு பொரித்து எடுக்கவும்.
- .சுவையான மக்காசோள பகோடா ஸ்நாக்ஸ் ரெடி.,