இடிச்சி அறைச்ச நண்டு ரசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவைக்கு ஈடு இனையில்லை!

crab rasam
- Advertisement -

நண்டு என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் நண்டு குழம்பு, நண்டு வறுவல், நண்டு சூப் போன்று வைத்துக்கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க நண்டு பிரியர்கள். அந்த வகையில் இன்று இடித்து அறைச்சு வைத்த நண்டு ரசம் எப்படி செய்வதென்று தான் பார்க்கப்போகிறோம்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : அரிசி அலசிய தண்ணீரில் சுவையான ரசம் இப்படி செய்து பாருங்க ? தனியாக வாங்கி கூட குடிப்பார்கள்!

- Advertisement -

அதுவும் சுட சுட சாதத்துடன் இந்த ரசத்தை சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி சத்துகள்.

crab rasam
Print
No ratings yet

நண்டு ரசம் | Crab Rasam Recipe In Tamil

நண்டு என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் நண்டு குழம்பு, நண்டு வறுவல், நண்டு சூப் போன்று வைத்துக்கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க நண்டு பிரியர்கள். அந்த வகையில் இன்று இடித்து அறைச்சு வைத்த நண்டு ரசம் எப்படி செய்வதென்று தான் பார்க்கப்போகிறோம். அதுவும் சுட சுட சாதத்துடன் இந்த ரசத்தை சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அவ்வளவு சுவையாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time22 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: crab rasam, நண்டு ரசம்
Yield: 4 people
Calories: 125kcal

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 10 பல் பூண்டு
  • 5 சின்ன வெங்காயம்
  • நண்டு கால்கள் கொஞ்சம்
  • 1 தக்காளி வேக வைத்தது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • கொத்தமல்லி கொஞ்சம்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • பெருங்காயம் கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் புளி தண்ணீர்

தாளிப்பதற்கு:

  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 2 வர மிளகாய்

செய்முறை

  • முதலில் இடிப்பதற்கு, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், சேர்த்து நன்கு இடித்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து நண்டு கால்களை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பௌலில் முதலில் இடித்து வைத்துள்ள மிளகு சீரகத்தை சேர்த்து அத்துடன் வேக வைத்த தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் பொடி, பெருங்காயம், தேவையான அளவு உப்பு, மற்றும் புளி தண்ணீர் ஊற்றி நன்கு கைகளால் கலந்துகொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வர மிளகாய் சேர்த்து பொரிந்ததும் கலந்து வைத்துள்ள கலவையை சேர்த்து அத்துடன் அரைத்து வடிகட்டிய நண்டு தண்ணீரையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

Nutrition

Serving: 400G | Calories: 125kcal | Protein: 31g | Fat: 0.1g | Cholesterol: 0.2mg | Potassium: 214mg