- Advertisement -
நாம் பொதுவாக சிக்கன், மட்டன் போன்ற கடினமான அசைவ உணவுகள் உட்கொள்ளும் போது கடைசியாக ரசம் சேர்த்து சாப்பிடுவது எதற்கு தெரியுமா ? இது போன்ற உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் அதற்காக தான். இதுடன் நாம் ரசம் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் வேகமாக நடக்கும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான பூண்டு ரசம் செய்வது எப்படி ?
- Advertisement -
இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். அதனால் இன்று இந்த சுவையான அரிசி அலசிய தண்ணீர் ரசம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
அரிசி அலசிய தண்ணீர் ரசம் | Arisi Alasiya Thaneer Rasam Recipe in Tamil
நாம் பொதுவாக அரிசியை கழுவி விட்டு அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம் உங்களுக்கு தெரியுமா அந்த தண்ணீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளனர் என்று ? இந்த ஊட்டச்சத்து மிக்க அரசி கழுவிய தண்ணீரில் எப்படி மிகவும் சுவையான ரசம் செய்வது, ரசம் செய்ய தேவையான பொருட்கள், அதற்கான செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் பார்க்கலாம்.
Yield: 4
Calories: 239kcal
Equipment
- 1 குழம்பு பாத்திரம்
- 2 பவுள்
தேவையான பொருட்கள்
- ½ tbsp மஞ்சள்தூள்
- ¼ tbsp மிளகுத்தூள்
- ¼ tbsp பெருங்காய பொடி
- 25 கிராம் புளி
- ½ tbsp கடுகு
- 1 tbsp சீரகம்
- 6 பல் பூண்டு
- 1 தக்காளி
- உப்பு தேவையான அளவு
- 1 கொத்து கருவேப்பிலை
- 4 வர மிளகாய்
- 1 கொத்து கொத்தமல்லி
- அரிசி கழுவிய தண்ணீர் தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் புளியை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து கழித்து புளி கரைசலை தயார் செய்து கொள்ளவும்.
- இந்த வேலை முடிந்தவுடன் அரசி அலசிய தண்ணீரை தேவையான அளவு எடுத்துக் கொண்டு புளி கரைசலை வடிகட்டி அரசி அலசிய தண்ணீர் உடன் சேர்த்து கொள்ளவும்.
- பின்பு ஒரு தக்காளி பழத்தையும் இதனுடன் சேர்த்து நன்கு பிசைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் நன்கு சூடேறவும் நாம் எடுத்து வைத்துள்ள கடுகு, சீரகம், கருவேப்பிலை, சோம்பு போன்றவற்றை போட்டு நன்றாக தாளிக்கவும்.
- பின்பு நாம் எடுத்து வைத்துள்ள வரமிளகாய் மற்றும் பூண்டு பல்லை நன்றாக இடித்து தாளிப்பதுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் வாசனை மாறு நிலையில் மிளகாய்தூள், பெருங்காயத்தூள், மஞ்சத்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு 2 அரை நிமிடங்கள் வதக்கவும்.
- அதன் பின்பு நாம் தயார் செய்துள்ள அரிசி அலசிய தண்ணீரும் புளி கரைசலும் கலந்த தண்ணீரை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- நன்றாக கொதிக்கும் பொழுது நாம் வைத்திருக்கும் கொத்தமல்லி இலைகளை ரசத்தின் மேல் தூவி ரசத்தை இறக்கி விடவும் இப்பொழுது அரிசி அலசிய தண்ணிரில் செய்த ரசம் தயாராகிவிட்டது.இதை இனி பரிமாறிக் கொள்ளலாம்.
Nutrition
Serving: 5g | Calories: 239kcal | Carbohydrates: 78g | Protein: 11g | Fat: 0.6g | Saturated Fat: 0.272g | Potassium: 252mg | Fiber: 2g | Sugar: 0.5g