பொதுவாக என்னதான் அசைவ குழம்பு வகை சைவ குழம்பு வகை என சாப்பிட்டாலும் அதற்கு இணையாக ரச பிரியர்களும் நம் ஊரில் அதிகம் உள்ளனர். பொதுவாக சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அதனுடன் கண்டிப்பான முறையில் ரசம் வைத்திருப்பார்கள். ஏனென்றால் சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவுகளை சாப்பிடும் பொழுது அதனுடன் இந்த ரசத்தினை சேர்த்து நாம் சாப்பிட்டால் அது நம் இரைப்பையில் நடக்கும் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இந்த ரசம் நம் ஊரில் பல வகையான முறைகளில் வைப்பார்கள்
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் தக்காளி மிளகு ரசம் செய்வது எப்படி ?
அதில் ஒரு வகை ரசத்தை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். ஆம் சுவையான பூண்டு ரசம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இது போன்ற ஒருமுறை உங்கள் வீட்டில் இந்த பூண்டு ரசத்தை வைத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அது மட்டுமில்லாமல் அடுத்த முறையும் உங்களை வைக்க சொல்வார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும் அதனால் இன்று இந்த பூண்டு ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சுவையான பூண்டு ரசம் | Poondu Rasam Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 குக்கர்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 3 மேசை கரண்டி துவரம் பருப்பு
- 1 கப் புளி கரைசல் நெல்லிக்காய் அளவு புளி
- ¼ tbsp மஞ்சள் தூள்
- 1 tbsp மிளகாய் தூள்
- ½ tbsp மல்லி தூள்
- 1 tbsp மிளகு தூள்
- 1 tbsp சீரகத் தூள்
- உப்பு தேவையான அளவு
ரசம் வைக்க
- 1 ½ மேசை கரண்டி எண்ணெய்
- 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
- 1 tbsp சீரகம்
- 1 tbsp வெந்தயம்
- 1 tbsp பெருங்காய தூள்
- 3 வர மிளகாய்
- 1 கொத்து கருவேப்பிலை
- 1 கைப்பிடி பூண்டு நசுக்கியது
- 1 தக்காளி நறுக்கியது
- ¼ tbsp மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- வேக வைத்த பருப்பு
- 2 கப் தண்ணீர்
- 1 கைப்பிடி கொத்த மல்லி
செய்முறை
- முதலில் மேலே குறிப்பிட்ட அளவில் துவரம்பருப்பு எடுத்து இரண்டு முறை தண்ணீரில் அலசி கொண்டு பின் ஒரு குக்கரில் சேர்த்து துவரம்பருப்பு முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- பின் வேக வைத்த துவரம் பருப்பை நன்கு மசித்து விட்டு பின் நாம் எடுத்துக் கொண்ட புளியை ஒரு பவுளில் சேர்த்து அதில் சூடான நீர் சேர்த்து புளியை கரைத்து புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும். பின் நாம் தயார் செய்த புளி கரைசலை பருப்புடன் சேர்த்து கொள்ளவும்.
- பின் மறுபடியும் குக்கரை அடுப்பில் வைத்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி கொள்ளுங்கள். பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
- பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு உளுந்த பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் போன்ற பொருட்களை சேர்த்து கிளறிவிட்டு, இனுடன் வர மிளகாய் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
- பின் பூண்டு நன்றாக வதங்கியதும் இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இனுடன் நாம் கொதிக்க வைத்து இறக்கிய பருப்பு சேர்த்து கொள்ளவும்.
- பின் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கடைசியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான பூண்டு ரசம் இனிதே தயாராகிவிட்டது.