நாம் பொதுவாக சிக்கன், மட்டன் போன்ற கடினமான அசைவ உணவுகள் உட்கொள்ளும் போது கடைசியாக ரசம் சேர்த்து சாப்பிடுவது எதற்கு தெரியுமா ? சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவு பொருட்கள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்காக சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவு பொருட்களை நாம் உட்கொள்ளும் போதும் நாம் சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பணிகள் வேகமாக நடக்கும்.
இதையும் படியுங்கள் : பாரம்பரிய பச்சை புளி ரசம் செய்வது எப்படி ?
இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். ஆகையால் இன்று இந்த காரசாரமான தக்காளி மிளகு ரசம் ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உணவோடு மட்டும் சாப்பிடாமல் தனியாக சூப் போல குடிக்கவும் செய்வார்கள் அந்த அளவுக்கு மிகவும் ருசியான முறையில் அட்டகாசமாக இருக்கும். ஆகையால் இன்று இந்த தக்காளி மிளகு ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
தக்காளி மிளகு ரசம் | Tomato Milagu rasam Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 4 தக்காளி நறுக்கியது
- புளி பாதி எலுமிச்சை பழம் அளவு
- 2 கப் தண்ணீர்
- 2 tbsp எண்ணெய்
- 1 tbsp மிளகு
- 1 tbsp சீரகம்
- 1 tbsp கடுகு உளுந்தம் பருப்பு
- 2 சின்ன வெங்காயம் நறுக்கியது
- பெருங்காய கட்டி சிறிது
- 1 கொத்து கருவேப்பிலை
- 2 பச்சை மிளகாய்
- 5 பல் பூண்டு
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- 1 கைப்பிடி கொத்த மல்லி
செய்முறை
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 4 நறுக்கி தக்காளி பழம் மற்றும் பாதி எலுமிச்சை பழம் அளவு உள்ள புளியை சேர்த்து நான்கு மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அரைத்த தக்காளி சாறு மற்றும் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு ஒரு டீஸ்பூன் மிளகு மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒன்றாக இணைத்து இடித்து பொடியாக்கி கொள்ளுங்கள். பின்பு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நான்கு காய்ந்ததும் அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடுகு உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
- பின் கடுகு பொரிந்து வந்தவுடன், இரண்டு சின்ன வெங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை, ஐந்து பல் பூண்டு மற்றும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் அதன் பின் நாம் இடித்து வைத்திருக்கும் மிளகு பொடியை இதனுடன் சேர்த்து நான்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
- அதன் பின் நாம் கொதிக்க வைத்த தக்காளி சாறு, மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இதனுடன் சேர்த்து கொதிக்க வையுங்கள், ரசம் நுரைத்து கொதித்து வரும் சமயத்தில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்து ரசத்தை இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் காரசாரமான தக்காளி ரசம் தயார்.