Home ஜூஸ் இந்த வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் ஜூஸ் இப்படி செஞ்சு டெய்லி குடிங்க!

இந்த வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் ஜூஸ் இப்படி செஞ்சு டெய்லி குடிங்க!

இந்த வெயிலுக்கு நம்ம எல்லாருக்குமே ஏதாவது ஜில்லுனு குடிக்கணும் அப்படின்னு தான் தோணிகிட்டே இருக்கும். ஆனால் நம்ம உடம்புக்கு மட்டுமில்லாம நம்ம முகத்துக்கும் சேர்த்து இப்போ நம்ம வெள்ளரிக்காய் ஜூஸ் தான் பாக்க போறோம். பொதுவாகவே இந்த வெயில் காலத்துல வெள்ளரிக்காய் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வெயில் காலத்துல கண்கள்ல ஏற்படுற சூடு குறைந்து கண்களுக்கு குளிர்ச்சியாகுறதோட உடம்புக்கும் சேர்த்து குளிர்ச்சி கிடைக்கும்.

-விளம்பரம்-

சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் யார் வேணும்னாலும் இந்த வெள்ளரிக்காய் சாப்பிடலாம். ஆனா இந்த வெயிலுக்கு ஒரு சூப்பரான வெள்ளரிக்காய் ஜூஸ் நம்ம டெய்லி குடிச்சோம் அப்படின்னா நம்மளோட ஸ்கின் ரொம்பவே பளபளப்பா மாறிடும். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு நிறைய ஹெல்த் பெனிபிட்ஸ் இருக்கு.

நீங்க டெய்லி இதை புடிச்சு பார்த்தா உங்களுக்கு நிறைய மாற்றங்கள் உங்க முகத்துல தெரியும். ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் உங்க குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கூட கொடுத்து விடலாம். இல்ல இப்போ லீவு விட்டாச்சு டெய்லி கூட உங்க குழந்தைகளுக்கு வீட்ல மதியம் நேரத்துல செஞ்சு கொடுக்கலாம். வெறும் நாளே பொருள் வச்சு சூப்பரா செய்யக்கூடிய இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்கிறதுக்கும் ரொம்ப இதமா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான புத்துணர்ச்சியா இருக்கக்கூடிய வெள்ளரிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
3 from 2 votes

வெள்ளரிக்காய் ஜூஸ் | Cucumber Juice Recipe In Tamil

சின்னகுழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் யார் வேணும்னாலும் இந்த வெள்ளரிக்காய் சாப்பிடலாம். ஆனா இந்த வெயிலுக்கு ஒரு சூப்பரான வெள்ளரிக்காய் ஜூஸ் நம்ம டெய்லி குடிச்சோம் அப்படின்னா நம்மளோட ஸ்கின் ரொம்பவே பளபளப்பா மாறிடும். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு நிறைய ஹெல்த் பெனிபிட்ஸ் இருக்கு. இல்ல இப்போ லீவு விட்டாச்சு டெய்லி கூட உங்க குழந்தைகளுக்கு வீட்ல மதியம் நேரத்துல செஞ்சு கொடுக்கலாம். வெறும் நாளே பொருள் வச்சு சூப்பரா செய்யக்கூடிய இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்கிறதுக்கும் ரொம்ப இதமா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான புத்துணர்ச்சியா இருக்கக்கூடிய வெள்ளரிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Juice
Yield: 4
Calories: 306kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 வெள்ளரிக்காய்
  • புதினா இலைகள் சிறிதளவு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சியா விதைகள்
  • 1 டீஸ்பூன் தேன்

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் வெள்ளரிக்காய் சேர்த்து அதனுடன் புதினா இலைகள் இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • தண்ணீர் சியா விதைகளை சேர்த்து நன்றாக ஊற வைக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள வெள்ளரிக்காய் ஜூஸ் உடன் ஐஸ் கட்டிகள் மற்றும் சியா விதைகள் சேர்த்து குடித்தால் மிகவும் வெயிலுக்கு இதமாக இருக்கும்.
  • இதில் சிறிதளவு தேன் சேர்த்தும் குடிக்கலாம்

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 306g | Protein: 8g | Sodium: 11.7mg | Fiber: 3g

இதையும் படியுங்கள் : வெயிலுக்கு ஏற்ற ஒரு இதமான சுவையான புதினா ஜூஸ் ஒரு தரம் இப்படி செஞ்சு பாருங்க!