- Advertisement -
கறிவேப்பிலை உங்கள் வீட்டில் அதிகம் இருந்தால் அப்போ இந்த ஸ்னாக்ஸ் செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். மாலை நேரத்தில் டீ காபியுடன் என்ன ஸ்னாக்ஸ் செய்து சாயிடலாம் என்று யோசிக்கிறீர்களா?
-விளம்பரம்-
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுவையினை மொறு மொறுனு கறிவேப்பிலை வடை செய்து விடலாம். டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
- Advertisement -
உடலுக்கு ஆரோக்கியமான இந்த வடை குழந்தைகளுக்கும் செய்து தரலாம். வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த கறிவேப்பிலை வடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
கறிவேப்பிலை வடை | Curry Leaves Vada Recipe In Tamil
கறிவேப்பிலை உங்கள் வீட்டில் அதிகம் இருந்தால் அப்போ இந்த ஸ்னாக்ஸ் செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். மாலை நேரத்தில் டீ காபியுடன் என்ன ஸ்னாக்ஸ் செய்து சாயிடலாம் என்று யோசிக்கிறீர்களா?வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுவையினை மொறு மொறுனு கறிவேப்பிலை வடை செய்து விடலாம். டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமான இந்த வடை குழந்தைகளுக்கும் செய்து தரலாம். வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த கறிவேப்பிலை வடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 2 கப் கறிவேப்பிலை
- 3 கப் கடலை பருப்பு
- 7 காய்ந்த மிளகாய்
- 2 டீஸ்பூன் சோம்பு
- இஞ்சி சிறு துண்டு
- 3 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
செய்முறை:
- முதலில் கறிவேப்பிலை வடை செய்வதற்கு கடலை பருப்பை 3 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
- கடலை பருப்பு நன்கு ஊறியதும், அதில் உள்ள நீரை வடித்து விட்டு அதனுடன், காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, ஆகிய வற்றை சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்த விழுதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.
- அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- இப்பொழுது சுவையினை கறிவேப்பிலை வடை தயார்.
இதையும் படியுங்கள் : மொறு மொறுனு ருசியான கேரட் மசால் வடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! பக்காவான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி!
-விளம்பரம்-