Advertisement
ஸ்வீட்ஸ்

குக் வித் கோமாளி நிகழ்சியில் சிவாங்கி செய்யத ஒரியோ ப்ரௌணி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

பண்டிகைகள் என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ரௌனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். சில உணவு வகைகள் எவ்வளவு உண்டாலும் திரும்பத் திரும்ப உண்ணத் தோன்றும், பிரவுனிகள் அந்த வகையை சார்ந்தவை.

இந்த ஓரியோ பிரவுனிகள் வயது வித்தியாசம் பாராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறிவிடும். ஏனென்றால் இந்த பிரவுனிகள் நாக்கில் வைத்ததும் கரைந்துவிடும் அளவிற்கு மிருதுவாகவும் மென்மையாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். ஆரம்ப காலகட்டங்களில் பண்டிகை காலங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்த இவை பிற்காலங்களில் இவைகளின் அதீத சுவையினால் பண்டிகை காலங்களில் மட்டும் அல்லாமல் பலர் விரும்பி உண்ணும் மாலை நேர சிற்றுண்டியாக மாறின.

Advertisement

இதுவரை நீங்கள் ஓரியோ ப்ரௌனியை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருப்பீர்கள். என்ன தான் இது உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தாலும், கடைகளில் வாங்கி சாப்பிடும் போது, அளவாகவே சாப்பிட முடியும். ஆனால் அதையே வீட்டில் உங்களுக்கு தேவையான அளவு செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா? அதனால் ஓரியோ ப்ரௌனி எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம்.

ஓரியோ ப்ரௌனி | Oreo Brownie Recipe in Tamil

Print Recipe
பண்டிகைகள் என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ரௌனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். சில உணவு வகைகள் எவ்வளவு உண்டாலும் திரும்பத் திரும்ப உண்ணத் தோன்றும், பிரவுனிகள் அந்த வகையை சார்ந்தவை. இந்த ஓரியோ பிரவுனிகள் வயது வித்தியாசம் பாராமல்
Advertisement
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறிவிடும். ஏனென்றால் இந்த பிரவுனிகள் நாக்கில் வைத்ததும் கரைந்துவிடும் அளவிற்கு மிருதுவாகவும் மென்மையாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.
Course Dessert, sweets
Cuisine American
Keyword brownie
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 122

Equipment

  • 2 பவுள்
  • 1 ஓவன்
  • 1 மிக்ஸி
  • 1 பீட்டர்

Ingredients

  • 4 ஓரியோ பிஸ்கட்
  • 1 முட்டை
  • 1/4 கப் பால்
  • 1/4 கப் சர்க்கரை
  • 25 கிராம் வெண்ணெய்
  • 50 கிராம் டார்க் சாக்லெட்
  • 1/2 கப் மைதா
  • 1/4 கப் கோகோ பவுடர்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/4 டீஸ்பூன் உப்பு                             

Instructions

  • முதலில் ஓரியோ பிஸ்கட்டை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் முட்டை எடுத்து‌ அதனை நன்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் ‌சர்க்கரை மற்றும் பால் சேர்த்து பீட்டரால் சர்க்கரை கறையும் வரை நன்கு பீட்‌ செய்யவும்.
  • பின் வெண்ணெய் மற்றும் சாக்லேட்டை ஓவனில் வைத்து நன்கு உருக்கி கொள்ளவும். இதனை முட்டையுடன் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
  • அதன்பிறகு கோகோ பவுடர், மைதா இரண்டையும்‌ சலித்து முட்டையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • இதில் பேக்கிங் பவுடர், நாம் அரைத்து வைத்துள்ள பிஸ்கட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் ஒரு பவுளில் பட்டர் பேப்பர் விரித்து அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள சாக்லேட் கலவையை ஊற்றி ஓவனில் 200° செல்சியஸில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான ஓரியோ ப்ரௌனி தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 122kcal | Carbohydrates: 11.9g | Protein: 2g | Fat: 8.5g | Saturated Fat: 1.4g | Sodium: 65mg | Fiber: 2.3g | Sugar: 2.1g

Advertisement
Prem Kumar

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

6 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

17 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

19 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago