தெரியாமல் கூட இந்த நேரங்களில் கடன் வாங்காதீர்கள்! கடனை திருப்பி கொடுக்கவே முடியாது!

- Advertisement -

இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒருவர் இன்னொருவருக்கு கடன் பட்டு தான் இருப்பார்கள். நான் யாரிடமும் பணமே கடன் வாங்க மாட்டேன் என்று சொல்பவர்கள் கூட ஏதாவது ஒரு வகையில் இன்னொருவருக்கு கடன் பட்டியிருப்பீர்கள் நிச்சயமாக. அந்த வகையில் கடன் வாங்குவது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமில்லை எல்லாருக்கும் கடன் என்பது இருக்கத்தான் செய்யும். அது அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்ப இருக்கும். ஒருவருக்கு ஆயிரம் கணக்கில் இருக்கும், ஒருவருக்கு இலட்சக்கணக்கில் இருக்கும், ஏன் ஒருவருக்கு கோடிக்கணக்கில் இருக்கும். அப்படி சில நேரங்களில் சில மனிதர்களின் சூழ்நிலை காரணமாக அந்த கடன்களில் இருந்து அவர்களால் மீள முடியாமல் போய்விடும். இதை பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கடன் வாங்குதல்

முதலில் கடன் வாங்குபவர்கள் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் நமக்கு தேவையில்லாத ஒரு ஆடம்பர தேவைக்காக செலவு செய்வதற்கு கடன் வாங்கி உங்கள் கடன் சுமையை அதிகரித்துக் கொள்ளாதீர்கள். அதைத் தவிர தொழில் நடத்துபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், ஏன் குடும்பத்தில் ஏதேனும் விசேஷம் போன்ற வைப்பவர்கள் தங்களிடம் பணம் இல்லாத சூழ்நிலையில் யாரோ ஒருவரிடம் பணம் வாங்கி விட்டு அந்த பணத்தை சிறிது நாட்களில் அடைத்து விடுவோம். ஆனால் அப்படி நாம் கடன் வாங்கும் பணத்தை சில திதிகளில் வாங்க கூடாது என நமது சாஸ்திரங்கள் சொல்கின்றனர்.

- Advertisement -

இந்த நேரங்களில் கடன் வாங்க கூடாது

நமது தினசரி வாழ்க்கையில் வரும் ராகு, எமகன்டம், குளிகை இது போன்ற நேரங்களில் நீங்கள் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக குளிகை நேரங்களில் கடன் வாங்கவே கூடாது என சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றனர். அதுமட்டுமில்லை சனிக்கிழமைகளில் வரும் சனி ஓரைகளில் நீங்கள் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது அதையும் மீறி நீங்கள் கடன் வாங்கல், கொடுக்கல் செய்தீர்கள். என்னென்றாலன அந்த கடனை திரும்ப வாங்கவும் முடியாது அந்த கடனை திரும்ப அடைக்கவும் முடியாமல் நீங்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

அம்மாவாசை திசை

அதேபோல் அம்மாவாசை திதிகளிலும் கடன் வாங்கவும் கொடுக்கவும் கூடாது என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அமாவாசை திதி அன்று நம் முன்னோர்களுக்கு பட்ட கடனை தீர்க்கும் நாளாகும். அதனால் அமாவாசைகளில் நம் பிதுர்களாகிய முன்னோர்களுக்கு பூஜை செய்து வழிபட வேண்டிய நாள். அந்த நாட்களில் நாம் இது போன்று கடன் கொடுப்பது வாங்குவது போன்ற செயல்களை செய்யும் போது நம் குடும்பத்தில் பல குழப்பங்களையும் பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

செவ்வாய், சுக்கிரன் கிரகம்

மேலும் இது மட்டும் இல்லாமல் நம் வீட்டில் வழக்கம் போல் சொல்லும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற தினங்களிலும் கடன் வாங்கவும் கொடுக்கவும் கூடாது. இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான் இருந்தாலும் மேலும் இந்த செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தினங்கள் மகாலட்சுமி தாயார், முருகப்பெருமான், செவ்வாய் கிரகம் சுக்கிரன் கிரகம், இந்த கிரகங்களுக்கான தினமும் கூட அதனால் இந்த நாட்களில் நாம் கொடுக்கும் பணமும் நமக்கு வராமல் இருப்பதோடு நாம் இந்த தினங்களில் யாரிடமாவது பணத்தை வாங்கினாலும் அதை திரும்ப அடைக்க முடியாது.

-விளம்பரம்-

கடன் வாங்காதீர்

கடன் வாங்குவது சற்று கஷ்டமான ஒன்றுதான் அப்படி நாம் வாங்கும் கடனையும் அறியாமல் இது போன்ற நாட்களிலும் திதிகளிலும் வாங்கும் போதும் நமக்கு ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகள் பத்தாது என்று புதியதாக இந்த பிரச்சனைகளையும் அதிகரித்து நமக்கு துன்பத்தை மட்டுமே கொடுக்கும். அதனால் இனிமேல் நீங்கள் யாருக்கு கடன் கொடுப்பது என்றாலும் வாங்குவது என்றாலும் நேரம், காலங்கள் பார்த்து பணத்தை கொடுத்து பழகுங்கள் அதேபோல் வாங்கி பழகுங்கள். நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் கடன் தொல்லையில் இருந்து மீண்டு சகஜ வாழ்க்கைக்கு வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here