மாலை நேரம் டீ, காபியுடன் சாப்பிட ருசியான ட்ரை ப்ரூட்ஸ் குக்கீஸ் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் மிக எளிமையான இரண்டு செய்முறைகளில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். பிஸ்கட் செய்வதற்கு மைக்ரோ ஓவன் தேவைப்படுமே என்று அதிகமாக யோசிக்க வேண்டாம். இந்த பிஸ்கட்டினை அடுப்பில் வெறும் கடாயை பயன்படுத்தி தான் செய்ய போகிறோம்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : ரசம் சாதம் குக்கரில் இப்படி சட்டுனு செஞ்சி பாருங்க! இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

இந்த பிஸ்கட் செய்ய மிகவும் குறைவான பொருள்களே தேவைப்படும். இந்த பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் அனைவரும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை நாம் வெகு நாட்கள் வைத்து கூட சாப்பிடலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் பாக்ஸிற்கும் கொடுத்து அனுப்பலாம். விடுமுறைக்காக வரும் வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்களுக்கும் இதனை செய்து கொடுத்து நமது அன்பினை வெளிப்படுத்தலாம்.

Print
No ratings yet

ட்ரை ப்ரூட்ஸ் குக்கீஸ்| Dry Fruits Cookies

பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் மிக எளிமையான இரண்டு செய்முறைகளில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். பிஸ்கட் செய்வதற்கு மைக்ரோ ஓவன் தேவைப்படுமே என்று அதிகமாக யோசிக்க வேண்டாம். இந்த பிஸ்கட்டினை அடுப்பில் வெறும் கடாயை பயன்படுத்தி தான் செய்ய போகிறோம். இந்த பிஸ்கட் செய்ய மிகவும் குறைவான பொருள்களே தேவைப்படும். இந்த பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் அனைவரும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: cookies
Yield: 4 People
Calories: 77.3kcal

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 1/2 கப் மைதா
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங்
  • 1/4 டீஸ்பூன் உப்பு                             
  • 1 கப் வெண்ணெய்
  • 1/4 கப் பொடித்த சர்க்கரை
  • 1 முட்டை

ஊற

  • 1 1/2 கப் ட்ரை
  • 1 டேபிள் ஸ்பூன் தேன்
  • 1/2 டீஸ்பூன் எலுமிச்சை

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய ட்ரை ஃப்ரூட்ஸ் அனைத்தையும் சேர்க்கவும். இத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  • இது மற்றொரு பாத்திரத்தில் மிருதுவான வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து 3 நிமிடம் நன்கு பீட் செய்யவும்.
  • அத்துடன் முட்டை சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும் மற்றொரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இப்போது வெண்ணெய் கலவையுடன் கலந்து வைத்துள்ள மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இத்துடன் ஊற வைத்துள்ள ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை கலக்கவும்.
  • கலந்த கலவையை இரண்டாகப் பிரித்து பட்டர் ஷீட்டில் வைத்து சரி சமப்படுத்தவும்.
  • இப்போது இவற்றை காற்று புகாதவாறு நன்றாக மூடி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும்.
  • இரண்டு மணி நேரம் கழித்து இதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு இட்லி பாத்திரத்தில் 20 நிமிடம் வைக்கவும். சுவையான ட்ரை ஃப்ரூட்ஸ் குக்கீஸ் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 77.3kcal | Carbohydrates: 2.8g | Protein: 5.8g | Sodium: 14mg | Fiber: 1.6g | Sugar: 0.4g