Advertisement
அசைவம்

ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக மாற்ற ருசியான மீன் புட்டு கறி இப்படி கூட செய்து பார்க்கலாம்!

Advertisement

பொதுவாக மீன் வகைகளை குழம்பு வைக்கலாம், வறுக்கலாம், பொரிக்கலாம், இப்போதெல்லாம் அதற்கும் ஒரு படி மேலே போய் ஃபிஷ் பிங்கர், ஃபிஷ் பிரியாணி, என்றெல்லாம் கூட செய்யலாம். இவை எல்லாவற்றை காட்டிலும் சுவையானது புட்டு. மீனை வைத்து செய்யப்படும் இந்த மீன் புட்டு கறி சுவைக்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. இதை சாப்பிட்டவர்களுக்கு இதன் சுவை தெரியும். இந்த மீன் புட்டு கறி ஒருமுறை வீட்டில் செய்தல் . பிறகு வார வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் இதைத்தான் செய்ய சொல்லி கேட்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கைப் பக்குவமும் இருக்கும். அசைவ உணவு என்றாலே கோழிக்கறி, ஆட்டுக்கறி அல்லது மீன் வகைகள் தான். இவற்றில் பலரும் விரும்பி சாப்பிடுவது மீன் வகைகள் தான்.  வித்தியாசமான முறையில் இவ்வாறு அமீன் புட்டு கறி செய்து கொடுத்து பாருங்கள். மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும் அடிக்கடி இவ்வாறு செய்து சாப்பிடுவீர்கள். வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement

மீன் புட்டு கறி | Fish Puttu Curry Recipe In Tamil

Print Recipe
பொதுவாக மீன் வகைகளை குழம்பு வைக்கலாம், வறுக்கலாம்,பொரிக்கலாம், இப்போதெல்லாம் அதற்கும் ஒரு படி மேலே போய் ஃபிஷ் பிங்கர், ஃபிஷ் பிரியாணி,என்றெல்லாம் கூட செய்யலாம். இவை எல்லாவற்றை காட்டிலும் சுவையானது புட்டு. மீனை வைத்துசெய்யப்படும் இந்த
Advertisement
மீன் புட்டு கறி சுவைக்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. இதை சாப்பிட்டவர்களுக்குஇதன் சுவை தெரியும். இந்த மீன் புட்டு கறி ஒருமுறை வீட்டில் செய்தல் . பிறகு வார வாரம்ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் இதைத்தான் செய்ய சொல்லி கேட்பார்கள்.
Course Side Dish, starters
Cuisine tamil nadu
Keyword Fish Puttu Curry
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Servings 4
Calories 329

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ முள்ளில்லாத மீன்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 5 வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மிளகாய் காள்
  • 1 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 3 பச்சை மிளகாய்
  • 7 பல் பூண்டு
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லித் தழை

Instructions

  • முள்ளில்லாத மீனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும், வேக வைத்த பின் மீனை ஆற வைத்து முள் இன்றி பிசைந்து வைக்கவும்.
  • இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், பூண்டு மற்றும் தேவைக்கேற்ப உப்பு (வேகவைக்கும் போது உப்பு சேர்த்துள்ளதால் குறைவாக சேர்க்கவும்) சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் பிசைந்து வைத்துள்ள மீன் கலவையை சேர்த்து நன்கு கிளறி மூடி வேக வைக்கவும்,
  • சிறிது நேரம் கழித்து எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறி விடவும், இது சுருள வந்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்,
     
  • ருசியான மீன் புட்டு கறி ரெடி.

Nutrition

Serving: 250g | Calories: 329kcal | Carbohydrates: 14g | Protein: 43g | Sodium: 231mg | Potassium: 132mg | Calcium: 13mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

17 நிமிடங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

1 மணி நேரம் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

2 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

6 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

6 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

6 மணி நேரங்கள் ago