வீட்டில் சிகப்பு அவல் இருந்தால் போதும் பிரமாதமாக இப்படி லட்டு செய்யலாம் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று அவல் லட்டு. அவல் புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது.இறைச்சிக்கு ஒரு அருமையான மாற்றாக அவல் உள்ளது. இதில் பல்வேறு உணவுகளை செய்து ருசிக்கலாம். இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு சுவையாக செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

-விளம்பரம்-

கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சுவையான உணவு பொருள் தான் அவல் லட்டு. அவல் என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் அவல் வைத்து செய்யும் லட்டு என்றால் பிடிக்காது என்று சொல்ல முடியுமா..? வீட்டில் சொந்தக்காரர்கள், அல்லது விஷேஷம் போன்று வைத்திருக்கும் போது என்ன ஸ்வீட் செய்யலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ சட்டுனு அவல் லட்டு செய்து கொடுத்து பாருங்க எல்லா லட்டும் காலியாகிவிடும்.

- Advertisement -

ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் மூன்றிலிருந்து நான்கு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். தினமும் ஒன்று அல்லது இரண்டு லட்டு என்று குழந்தைகளுக்கு கொடுங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள். அதேசமயம் ஆரோக்கியத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று ஒரு துளியும் பயப்படவேண்டாம்.

Print
3 from 2 votes

சிகப்பு அவல் லட்டு | Flattened Rice Laddu Recipe In Tamil

இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. சைவ பிரியர்களுக்கு பிடித்த இனிப்புகளில் ஒன்று அவல் லட்டு. அவல் புரத தேவையில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்கிறது. இறைச்சிக்கு ஒரு அருமையான மாற்றாக அவல் உள்ளது. இதில் பல்வேறு உணவுகளை செய்து ருசிக்கலாம். இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு சுவையாக செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். கிருஷ்ணருக்கு பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சுவையான உணவு பொருள் தான் அவல் லட்டு. அவல் என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் அவல் வைத்து செய்யும் லட்டு என்றால் பிடிக்காது என்று சொல்ல முடியுமா..?
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: snacks
Cuisine: Indian
Keyword: Aval laddu
Yield: 4 People
Calories: 170kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் அவல்
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 3 டேபிள் ஸ்பூன் பால்
  • 1/4 கப் நெய்
  • 1/4 கப் தேங்காய்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 5 பாதாம்
  • 10 முந்திரி, திராச்சை

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அவலை சேர்த்து வாசம் வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • பின் தேங்காய் துருவலை வாணலியில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
  • மற்றொரு கடாயில் பாதாம், முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அவல் சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து பொடித்துக்கொள்ளவும். பொடித்த அவல் பொடியுடன், வறுத்த தேங்காய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் நாட்டு சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் அரைக்கவும்.
  • பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் பொடித்த அவல், தேங்காய் பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
  • பின்னர் இவற்றுடன், வறுத்த முந்திரி, திராட்சை, நாட்டு சர்க்கரை, தேவையான அளவு நெய், பால், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளை உருட்டவும்.
  • அவ்வளவுதான் சுவையான சிகப்பு அவல் லட்டு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 170kcal | Carbohydrates: 3.8g | Protein: 7g | Fat: 1.8g | Sodium: 65mg | Potassium: 78mg | Fiber: 1.34g | Vitamin A: 115IU | Calcium: 4mg | Iron: 1.8mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் ருசியான பேரிச்சை லட்டு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு லட்டு கூட மிஞ்சாது!