வாரம் ஒரு முறையாவது ருசியான பூண்டு கறி ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

பூண்டு தினமும் நமது சாப்பாட்டில் இடம் பெற வேண்டிய அத்தியாவசியமான ஒரு உணவுப் பொருள். அதிக மெனக்கெடல் இல்லாத, எப்போதும் நமது கிச்சனில் இருக்கும் ஒரு உணவுப் பொருளும்கூட. சமையலறையில் முக்கியமாக பொருளாக வலம்வரும் பூண்டு பல நன்மைகளை அளிக்கின்றது. பூண்டை வறுத்து, சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். இவ்வாறு பல வழிகளில் நன்மையை அளிக்கும் பூண்டு கறி வைத்து சாப்பிடுவது தனி ருசி. இரண்டு மூன்று நாட்கள் வரை இன்றும் கிராம மக்கள் சுண்ட வைத்து சாப்பிடுவதை நாம் பார்க்க முடிகின்றது. உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லாமல், வெறும் பூண்டு மற்றும் வெங்காயம் மட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு எளிமையான முறையில் கறி செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த கறியை நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

-விளம்பரம்-

வழக்கமான முறையில் பூண்டு குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாறுதலான சுவையில் ஈசியாக செய்யக்கூடிய, அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பூண்டு கறி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பூண்டு கறி எப்படி செய்வது என இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். வழக்கமாக வைக்கும் சாம்பார், ரசத்தால் ஒரு வித சலிப்பு ஏற்பட்டிருக்கும். எதாவது வித்யாசமான குழம்பு செய்யலாம் என்று தோன்றினாலும் அதற்கு செலவாகும் நேரம் நினைத்து, அதை செய்யமாட்டோம். இதனால் 10 நிமிடங்களில் ஈசியாக செய்யும் பூண்டு கறி எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

- Advertisement -
Print
4.34 from 3 votes

பூண்டு கறி | Garlic Curry Recipe In Tamil

பூண்டு தினமும் நமது சாப்பாட்டில் இடம் பெற வேண்டிய அத்தியாவசியமான ஒரு உணவுப் பொருள். அதிக மெனக்கெடல் இல்லாத, எப்போதும் நமது கிச்சனில் இருக்கும் ஒரு உணவுப் பொருளும்கூட. சமையலறையில் முக்கியமாக பொருளாக வலம்வரும் பூண்டு பல நன்மைகளை அளிக்கின்றது. பூண்டை வறுத்து, சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். இவ்வாறு பல வழிகளில் நன்மையை அளிக்கும் பூண்டு கறி வைத்து சாப்பிடுவது தனி ருசி. இரண்டு மூன்று நாட்கள் வரை இன்றும் கிராம மக்கள் சுண்ட வைத்து சாப்பிடுவதை நாம் பார்க்க முடிகின்றது. உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லாமல், வெறும் பூண்டு மற்றும் வெங்காயம் மட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு எளிமையான முறையில் கறி செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த கறியை நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Garlic Curry
Yield: 4 People
Calories: 149kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் பூண்டு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்

செய்முறை

  • முதலில் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாயை ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு‌ காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கருவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்தூள், உப்பு, தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் கறிக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும். பூண்டு கறி கொதித்து எண்ணெய் பிரிந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பூண்டு கறி தயார். இது சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்ட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 450 g | Calories: 149kcal | Carbohydrates: 3.3g | Protein: 6.4g | Fat: 1.5g | Saturated Fat: 0.2g | Sodium: 17mg | Potassium: 401mg | Vitamin A: 1.17IU | Vitamin C: 31.2mg | Calcium: 181mg

இதனையும் படியுங்கள் : ருசியான பூண்டு வெந்தய பொங்கல் இப்படி செய்து பாருங்க உடலுக்கு மிகவும் நல்லது, மருத்துவ குணங்கள் அடங்கியது இந்த பொங்கல்!