இந்த வெயிலுக்கு கருப்பு திராட்சை ஜூஸ் ஜில்லுனு போட்டு குடிங்க!

- Advertisement -

இந்த வெயிலுக்கு நம்ம தினமும் ஏதாவது ஒரு ஜூஸ் ஐஸ்கிரீம் அப்படின்னு சாப்பிட்டுகிட்டே இருப்போம். அந்த வகையில ஒரு வாரத்துக்கு தேவையான ஜூஸ் தயார் பண்ணி பிரிட்ஜுக்குள்ள வச்சுட்டு தேவைப்படுறப்ப அதுல சர்க்கரையும் ஐஸ்கட்டிகளும் சேர்த்து குடிச்சா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு வாரத்துக்கு கெட்டுப்போகாமல் இருக்கிற மாதிரி நம்ம செஞ்சு வெச்சிருக்கிற போற ஒரு ஜூஸ் என்ன அப்படின்னா கருப்பு திராட்சை ஜூஸ்.

-விளம்பரம்-

இந்த கருப்பு திராட்சை ஜூஸ் குடிச்சா ஸ்கின் ரொம்பவே பளபளப்பா இருக்கும். இந்த ஜூஸ் மட்டும் பிரிட்ஜுக்குள்ள இருந்தா குழந்தைங்க எப்ப ஜூஸ் கேட்டாலும் டக்குனு சக்கரையும் ஐஸ்கட்டிகளும் கலந்து கொடுத்துவிடலாம் அவங்களும் ரொம்ப விரும்பி குடிப்பாங்க. இந்த கருப்பு திராட்சை ஜூஸ் செய்தது ரொம்ப வெரி ஈஸி தான் இது கூட இஞ்சியும் ஏலக்காயும் சேர்த்து கொதிக்க வச்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கிட்டோம் அப்படின்னா ஒரு வாரத்துக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் டேஸ்டும் ரொம்ப சூப்பரா அட்டகாசமா இருக்கும்.

- Advertisement -

குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவ் விட்டிருக்க அதனால இந்த மாதிரி எல்லாம் செஞ்சு கொடுத்தா அவங்க எப்பவுமே வீட்டிலேயே இருப்பாங்க. இந்த கருப்பு திராட்சை ஜூஸ் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவங்களும் விரும்பி குடிப்பாங்க. ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். என்னதான் நம்ம கருப்பு திராட்சை ஜூஸ் குடிச்சிருந்தாலும் இந்த கருப்பு திராட்சை ஜூஸ் கொஞ்சம் டிஃபரண்டா டேஸ்ட் ரொம்ப வித்தியாசமா இருக்கும். குடிக்கிறதுக்கும் தொண்டைக்கு இதமா சூப்பராக இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான கருப்பு திராட்சை ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

திராட்சை ஜூஸ் | Grape Juice Recipe In Tamil

குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவ் விட்டிருக்க அதனால இந்த மாதிரி எல்லாம் செஞ்சு கொடுத்தா அவங்க எப்பவுமே வீட்டிலேயே இருப்பாங்க. இந்த கருப்பு திராட்சை ஜூஸ் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவங்களும் விரும்பி குடிப்பாங்க. ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். என்னதான் நம்ம கருப்பு திராட்சை ஜூஸ் குடிச்சிருந்தாலும் இந்த கருப்பு திராட்சை ஜூஸ் கொஞ்சம் டிஃபரண்டா டேஸ்ட் ரொம்ப வித்தியாசமா இருக்கும். குடிக்கிறதுக்கும் தொண்டைக்கு இதமா சூப்பராக இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான கருப்பு திராட்சை ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time15 minutes
Total Time15 minutes
Course: juice
Cuisine: tamil nadu
Keyword: Grape Juice
Yield: 3
Calories: 306kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 துண்டு இஞ்சி
  • 1 கப் கருப்பு திராட்சை
  • 4 ஏலக்காய்
  • 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • ஐஸ்கட்டிகள் சிறிதளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இஞ்சியை கழுவி சுத்தம் செய்த பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும்
     
  • பிறகு ஏலக்காயையும் சேர்த்துக் கொள்ளவும். அதன் பிறகு அதன் கருப்பு திராட்சையை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
  • கருப்பு திராட்சை நன்றாக வெந்து வந்தவுடன் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும்
  • தயார் செய்து வைத்துள்ள இந்த கருப்பு திராட்சை ஜூஸை ஒரு வாரத்திற்கு பிரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • தேவைப்படும் பொழுது ஒரு கிளாஸில் ஐஸ் கட்டிகள் பொடியாக்கிய சர்க்கரை தயார் செய்து வைத்துள்ள கருப்பு திராட்சை ஜூஸ் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து பரிமாறினால் சுவையான கருப்பு திராட்சை ஜூஸ் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 290g | Protein: 21g | Sodium: 11.7mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : கோடை வெயிலுக்கு குளுகுளுனு குடிக்க லெமன் மொஜிடோ வீட்டிலேயே ஒரு தடவை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!