கோடை வெயிலுக்கு குளுகுளுனு குடிக்க லெமன் மொஜிடோ வீட்டிலேயே ஒரு தடவை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

அடிக்கிற வெயிலுக்கு தினமும் இப்பெல்லாம் ஏதாவது ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டே இருப்போம் இல்ல நான் பழங்கள் வாங்கி வச்சு சாப்பிட்டுட்டே தான் இருப்போம். அந்த வகையில் மொஜிட்டோ எல்லாரும் கடைகள்ல வாங்கி தான் குடிச்சி இருப்போம். ஆனா வீட்ல செய்யலாம் அப்படின்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா. ஆமாங்க கடைகளில் நிறைய வேலை போட்டு வாங்கி குடிக்கிற இந்த மொஜிட்டோவை நம்ம வீட்டிலேயே ரொம்பவே கம்மியான விலைக்கு பொருட்கள் வாங்கி சூப்பர் டேஸ்ட்டா கடைகள்ல கிடைக்கிற மாதிரியே செய்யலாம்.

-விளம்பரம்-

அதுக்கப்புறம் நீங்க கடைக்கு போய் குடிக்கவே மாட்டீங்க எப்பவுமே வீட்லதான் செஞ்சு குடிப்பீங்க அந்த அளவுக்கு உங்களுக்கு வீட்ல செய்ற அந்த டேஸ்ட் ரொம்ப பிடிச்சு போயிடும். நமக்கு என்ன பிலேவர் வேணுமோ அதை வீட்டிலேயே செய்யலாம். ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே இதுக்கு போதும். இதுக்கு மெயினான ஒரு பொருள்னா சோடா தான் இந்த சோடா மட்டும் வாங்கி ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சுக்கிட்டீங்கன்னா போதும் உங்களுக்கு எப்ப எல்லாம் மொஜிட்டோ குடிக்கணும்னு தோணுதோ அப்ப எல்லாம் நீங்க குடிச்சுக்கலாம்.

- Advertisement -

குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்ப வேக விரும்பி குடிக்க கூடிய இந்த குளிர்பானத்தை உங்க வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கும் கூட செஞ்சு கொடுங்க. கண்டிப்பாக கடையில தானே வாங்கினீங்க அப்படின்னு கேட்பாங்க. அந்த அளவுக்கு கடையில் கிடைக்கிற அதே டேஸ்ட்ல நம்மளால வீட்டுல செய்ய முடியும். இப்ப வாங்க இந்த சுவையான அட்டகாசமான ஜில்லுனு கிடைக்கக்கூடிய இந்த லெமன் மொஜிட்டோ எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

லெமன் மொஜிட்டோ | Lemon Mojitto Recipe In Tamil

அடிக்கிற வெயிலுக்கு தினமும் இப்பெல்லாம் ஏதாவது ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டே இருப்போம் இல்ல நான் பழங்கள் வாங்கி வச்சு சாப்பிட்டுட்டே தான் இருப்போம். அந்த வகையில் மொஜிட்டோ எல்லாரும் கடைகள்ல வாங்கி தான் குடிச்சி இருப்போம். ஆனா வீட்ல செய்யலாம் அப்படின்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா. ஆமாங்க கடைகளில் நிறைய வேலை போட்டு வாங்கி குடிக்கிற இந்த மொஜிட்டோவை நம்ம வீட்டிலேயே ரொம்பவே கம்மியான விலைக்கு பொருட்கள் வாங்கி சூப்பர் டேஸ்ட்டா கடைகள்ல கிடைக்கிற மாதிரியே செய்யலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Lemon Mojitto
Yield: 4
Calories: 106kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 எலுமிச்சை பழம்
  • 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1 டம்ளர் சோடா
  • புதினா இலைகள் சிறிதளவு

செய்முறை

  • ஒரு டம்ளரில் எலுமிச்சம் பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்
  • அதில் சர்க்கரை உப்பு மற்றும் புதினா இலைகள் சேர்த்து நன்றாக நசுக்கி கொள்ளவும்.
  • அனைத்தும் ஒன்றாக கலந்தவுடன் அதனுடன் சோடாவை ஊற்றி பரிமாறினால் சுவையான மொஜிட்டோ தயார்.

Nutrition

Serving: 200ml | Calories: 106kcal | Carbohydrates: 64g | Protein: 8g | Fat: 1g | Sodium: 11.7mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : அடிக்கிற வெயிலுக்கே இதமா வாட்டர் மெலன் மொஜிட்டோ இப்படி செய்து பாருங்க!