ஒரு அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி ருசியான கீரை ப்ரைடு ரைஸ் இப்படி செஞ்சி கொடுங்கள்!

- Advertisement -

சாப்பிடாத குழந்தைகளுக்காகவே புதுசாக கீரைல ஒரு உணவு செய்ய போறோம். கீரையில் குழம்பு, கூட்டு, பொரியல், கடையல் நிறைய செய்து கொடுத்திருப்போம். ஆனால் குழந்தைகள் கொடுக்கிற சாப்பாட்டுல இருக்க கீரையை தனியா ஒதுக்கி வைத்து விடுவார்கள்.  அப்படி கீரையை உங்க குழந்தைங்க சாப்பிட மாட்டாங்களா அப்படி கீரையை சாப்பிடாத குழந்தைகளுக்காக தான் இந்த புதுவிதமான உணவு.

-விளம்பரம்-

இது எப்போதும் செய்யுற உணவுதான். ஆனால் இதை கொஞ்சம் நம்ம வித்தியாசமா செய்ய போறோம். கீரையை வைத்து பிரைடு ரைஸ் பண்ண போறோம். கீரையில் இருக்கிற இரும்பு சத்து குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்று. கண்டிப்பா கீரைகளை குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வகையில்  கொடுக்கலாம். அப்பதான் அவங்களுக்கு இரும்பு சத்து நல்லா கிடைக்கும். ஹீமோகுளோபின் அளவு அதிகமா ஆகும். அவங்க ரொம்ப சுறுசுறுப்பா இருக்க இந்த கீரை கொடுக்கிறது ரொம்பவே அவசியம்.

- Advertisement -

அதனால குழந்தைகளுக்கு கீரையை சூப்பாவது சேர்த்து கொடுத்துருங்க. எந்த வகையில கீரையை கொடுத்தா குழந்தைகள் சாப்பிடுவார்கள் அந்த விதத்தில் கொடுக்கணும். இப்போ நம்ம இந்த கீரையை வைத்து ஒரு ஃபிரைட் ரைஸ் பண்ணி கொடுக்க போறோம். கண்டிப்பா இது என்னன்னே தெரியாம அவங்க நிச்சயமா சாப்பிடுவாங்க. காரணம் அது வெறும் பச்சை கலர்ல இருக்கு அதனால இது என்ன அப்படின்னு அவங்க யோசிக்க மாட்டாங்க . கலரா இருக்கு அப்படிங்கறதை மட்டும் யோசிச்சு சாப்பிடுவாங்க.அதனால நம்ம இந்த கீரை ஃப்ரைட் ரைஸ் ரொம்ப டேஸ்ட்டா குழந்தைகளுக்கு தெரியாம சீக்ரெட்டா செஞ்சு குடுக்க போறோம். சரி வாங்க அந்த கீரை ஃப்ரைட் ரைஸ் எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
5 from 2 votes

கீரை ஃப்ரைட் ரைஸ் | Greens Fried Rice Recipe In Tamil

குழந்தைகளுக்கு கீரையை சூப்பாவது சேர்த்து கொடுத்துருங்க.எந்த வகையில கீரையை கொடுத்தா குழந்தைகள் சாப்பிடுவார்கள் அந்த விதத்தில் கொடுக்கணும்.இப்போ நம்ம இந்த கீரையை வைத்து ஒரு ஃபிரைட் ரைஸ் பண்ணி கொடுக்க போறோம். கண்டிப்பா இதுஎன்னன்னே தெரியாம அவங்க நிச்சயமா சாப்பிடுவாங்க. காரணம் அது வெறும் பச்சை கலர்ல இருக்குஅதனால இது என்ன அப்படின்னு அவங்க யோசிக்க மாட்டாங்க . கலரா இருக்கு அப்படிங்கறதை மட்டும்யோசிச்சு சாப்பிடுவாங்க.அதனால நம்ம இந்த கீரை ஃப்ரைட் ரைஸ் ரொம்ப டேஸ்ட்டா குழந்தைகளுக்குதெரியாம சீக்ரெட்டா செஞ்சு குடுக்க போறோம். சரி வாங்க அந்த கீரை ஃப்ரைட் ரைஸ் எப்படிசெய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Greens Fried Rice
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் சாதம்
  • 1 கப் முருங்கைகீரை
  • 3 காய்ந்தமிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 5 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்காமல் தனியா விதைகள், சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டைதோலோடு தட்டி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அதே கடாயில் எண்ணெய் சேர்க்காமல் முருங்கைக்கீரையை மொறுமொறுவென்று வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  •  பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், தனியா விதைகள், சீரகம் பூண்டு வறுத்து வைத்துள்ளதை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும் .
  • பிறகு  அதில் வறுத்து வைத்துள்ள கீரையையும் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும் .
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
  • பின் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் பிறகு பொடித்து வைத்துள்ள கீரை சேர்த்து தேவையானஅளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு சூடாக பரிமாறினால் சுவையான ஆரோக்கியமிக்ககீரை பிரைட் ரைஸ் தயார். இந்தக் கீரை பிரைட் ரைஸ் உடன் உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய்வறுவல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg

இதையும் படியுங்கள் : உடலில் இருக்கும் கொழுப்பு கரைய ருசியான முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவலை இப்படி செய்து சாப்பிடுங்கள்!