Advertisement
உடல்நலம்

சித்தர்கள் அருளிய கொய்யா இலை டீ சர்க்கரையை விரட்டும்!

Advertisement

இன்றைய சூழலில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் நம்மில் பலருக்கும் சர்க்கரை நோய் வந்து பாடாய்ப்படுத்துகிறது. சிலர் கண்ணில் கண்டவை, காதில் கேட்டவை, பக்கத்து வீட்டுக்காரர் சொன்னவை என்று சொல்லிக்கொண்டு பல்வேறு மருத்துவ முறைகளை செய்து பார்த்தும் அவை பலனளிக்கவில்லை என்று சொல்வதை கேட்க முடிகிறது.

உணவு

சர்க்கரை நோயைப் பொறுத்தவரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். கட்டுப்பாடு என்று சொன்னதும் சிலர் சொல்வதைப்போல் அதைச் சாப்பிடாதீர்கள், இதைச் சாப்பிடாதீர்கள் என்று நாம் சொல்லப்போவதில்லை. விரும்பும் உணவுகளைச் சாப்பிடலாம். ஆனால், தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

Advertisement

மூலிகைத் தேநீர்

காலையில் தொடங்கி இரவு வரை நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை பட்டியல் போட வேண்டும். அதை கொஞ்சம் வரைமுறைப்படுத்தினாலே சர்க்கரை நோயில் இருந்து விடுபட்டுவிடலாம். காலையில் கண் விழித்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். முதலில் காலங்காலமாக நீங்கள் குடிக்கக்கூடிய காபியை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் வழக்கமான காபி, டீயைக் குடியுங்கள். மற்றநாட்களில் கொய்யா இலையில் ஒரு தேநீர் தயாரித்துக் குடிக்கலாம். இன்னொருநாள் சீத்தாப்பழ இலையில் டீ போட்டு குடிக்கலாம். இதேபோன்று ஆவாரம்பூவில்கூட டீ போட்டு குடிக்கலாம்.

சர்க்கரை

டீ என்று சொன்னதும் நாமெல்லாம் டீத்தூள் சேர்த்தால்தான் அதை டீ என்று சொல்கிறோம். அதனாலேயே நம்மில் பலர் எந்த மூலிகையில் தேநீர் செய்தாலும் அதனுடன் தேயிலை சேர்ப்பார்கள். அப்படி இல்லாமல் வெறும் மூலிகையை மட்டும் வைத்து டீ போட வேண்டும். இதை கசாயம் என்றுகூட சொல்லலாம். உதாரணமாக சொல்வதென்றால் வெறும் கொய்யா இலையுடன் நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டிக் குடிக்கலாம். இதனுடன் வேறு எதையும் சேர்க்கக்கூடாது. தேவைப்பட்டால் நாட்டுச்சக்கரை, கருப்பட்டி சேர்த்துக் குடிக்கலாம். சிலநாட்கள் இனிப்பு சேர்ந்த தேநீரை அருந்திவிட்டு சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். அளவு மாறுபட்டால் இனிப்பு சேர்ப்பதை நிறுத்த வேண்டும். வெறும் இலையை மட்டும் கொதிக்க வைத்துக் குடியுங்கள்.

நெல்லி பாகல் ஜூஸ்

மற்றபடி நெல்லிக்காயையும் பாகற்காயையும் சேர்த்து ஒரு ஜூஸ் செய்து அருந்தலாம். அதை எப்படி

Advertisement
தயாரிக்க வேண்டுமென்றால் ஒரு நெல்லிக்காய், அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக பாகற்காய் சேர்த்து அரைத்து எடுத்து வடிகட்டிக் குடிக்கலாம். காலை காபி, டீக்குப் பதில் இதுபோன்று மாற்றி மாற்றி செய்தால் போதும். அடுத்ததாக காலை உணவாக வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பழம் சாப்பிடக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். இயற்கையான இனிப்பு ஒன்றும் செய்யாது. ஆனால், பழம்
Advertisement
சாப்பிட்ட பிறகு ஒரு இட்லியோ அல்லது ஒரு வடை சாப்பிட்டாலும்கூட ஆபத்துதான். வெந்த உணவையும் வேகாத உணவையும் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

மாங்கொழுந்து துவரம்பருப்பு

அடுத்தது மாங்கொழுந்து சாப்பிடலாம்… அதாவது கொழுந்து மா இலையுடன் துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்துச் சாப்பிடவேண்டும். இதை பழ உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்போ அல்லது ஒரு மணி நேரம் கழித்தோ சாப்பிட வேண்டும். இதை எந்த உணவுடனும் சேர்த்து சாப்பிட வேண்டாம். இல்லையென்றால் காலையில் கொய்யா இலை தேநீருக்குப் பதிலாக மா இலை தேநீர்கூட தயாரித்துக் குடிக்கலாம்.

திரிபலா சூரணம்

மதிய உணவுடன் கிழங்கு வகை உணவையும், இறைச்சி உணவையும் கூடியமட்டும் தவிர்க்கப்பாருங்கள். ஒருவேளை தவிர்க்கமுடியாத சூழலில் சாப்பிட்டால் வெற்றிலை போட வேண்டும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு செரிமானப் பிரச்சினை இருக்கக்கூடாது. ஆனால் எந்தக்காரணம் கொண்டும் இரவு வேளையில் அசைவ உணவு வேண்டாம். இரவு சீக்கிரம் செரிமானமாகக்கூடிய உணவு சாப்பிடுவது நல்லது. முடிந்தால் தூங்கச்செல்வதற்கு முன் திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.

உடல் உழைப்பு

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மணிக்கணக்கில் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது நல்லதல்ல. உடலுழைப்பு அவசியம் தேவை. நம் பகுதியில் விளையக்கூடிய காய்கறிகள், உணவுகளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் எட்டிப்பாக்காது.

Advertisement
Maria Bellsin

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

6 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

16 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

18 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago