Advertisement
உடல்நலம்

கல்லீரல் பாதிப்யை சரி செய்யும் சித்தர்களின் ஆபூர்வ மூலிகைச் சாறு!

Advertisement

கறிக்கடைக்குப் போய் கால் கிலோ லிவர் கொடுங்க’ என்று கேட்போம். அந்த லிவர்… அதாவது கல்லீரல் என்ன வேலை செய்கிறது என்று நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்? நாம் சாப்பிடக்கூடிய உணவு செரிமானமாவதற்குத் தேவையான பித்தநீரை சுரக்கும் பணியைச் செய்வது இந்த கல்லீரல். அதுமட்டுமல்ல ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும் வேலையையும் இந்த கல்லீரல்தான் செய்கிறது. ஆனால் பலர் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்துவதாலும், கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்பதாலும் நம்மில் பலரது கல்லீரல் பழுதடைந்திருக்கிறது.

கல்லீரல் எப்படி பழுதாகிறது

ஆல்கஹால்… அதாவது சரக்கு, மதுபானம். அதைக் குடிக்க குடிக்க கல்லீரல் சுத்திகரிக்கும் பணியை மிகச் சிறப்பாகச் செய்து அதையெல்லாம் கழிவோடு கழிவாக வெளியேற்றிவிடும். ஆனாலும் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா? ஒரு கட்டத்தில் அந்த மெஷின்… அதாவது கல்லீரல் செயலிழந்துபோய்விடும். மதுபானம் அருந்துகிறவர்களுக்கு மட்டுமல்ல… எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கும்கூட கல்லீரல் பழுதாகியிருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்ன என்று கேட்டால் தவறான உணவுப்பழக்கமே. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ், பாட்டில்களில் அடைக்கப்பட்ட சோடா, கூல்டிரிங்க்ஸ், நீண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தப்படும் இறைச்சி என அந்தப்பட்டியல் நீள்கிறது. ஏன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுகிறவர்களுக்குக்கூட இந்தப் பிரச்சினை வரலாம்.

Advertisement

கீழா நெல்லி

கல்லீரல் பாதிப்பு, ஃபேட்டி லிவர், மஞ்சள்காமாலை என அந்தப் பிரச்சினைகள் வெவ்வெறு வடிவங்களில் வந்தாலும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கீழாநெல்லி என்ற மூலிகை நல்ல நிவாரணம் தருகிறது. கீழாநெல்லியின் மருத்துவ குணம் பற்றி அறிவதற்குமுன் முதலில் கீழாநெல்லியை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது அவசியம். இது எல்லா இடங்களிலும் மிகச் சாதாரணமாக வளரக்கூடிய ஒரு மூலிகை. இதன் இலைக்கு அடியில் நெல்லிக்காய்களைப் போன்று சிறிய காய்கள் காய்த்திருக்கும். இந்த மூலிகையை அரைத்து

Advertisement
சாறு எடுத்து குடித்தாலே போதும். கீழாநெல்லிக்கு கீழ்வாய் நெல்லி, கீழ்க்காய் நெல்லி என பல பெயர்கள் இருக்கின்றன…

கீழா நெல்லி சாறு எப்படி எடுப்பது

சரி, இப்போது எப்படி சாறு எடுப்பது என்று பார்ப்போம். கைப்பிடி கீழாநெல்லிச்செடியை எடுத்துக்கொள்ளுங்கள். பொதுவாக மூலிகைகளை அப்படியே பயன்படுத்தாமல் அவற்றை உப்பு கலந்த நீரில் நன்றாக அலசி

Advertisement
எடுக்க வேண்டியது அவசியம். அதன்பிறகே அதை பயன்படுத்த வேண்டும். இலை மட்டுமல்லாமல் முழுச் செடியையும் அப்படியே போட்டு அரைத்து சாறு எடுக்கலாம். சாறு எடுத்ததும் அதை வடிகட்டி பசும்பால் இல்லையென்றால் மோருடன் சேர்த்துக் கலந்து குடிக்கலாம். இதை மூன்றில் இருந்து ஏழு நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். பிரச்சினையைப் பொறுத்து 21 நாட்கள்கூட குடிக்கலாம். இதை குடிக்கும்போது உப்பு, புளி இல்லாத சாப்பாடு சாப்பிட்டால் முழுமையான பலன் கிடைக்கும்.

கீழா நெல்லியை உணவுடனும் எடுத்து கொள்ளலாம்

கீழாநெல்லியுடன் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, மூக்கிரட்டை போன்ற கீரைகளைச் சேர்த்து கலவைக்கீரைகளை கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவதுபோன்று செய்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். இதை எல்லோருமே சாப்பிடலாம். இதேபோன்று ஆவாரம்பூவும்கூட கல்லீரல் பாதிப்பில் இருந்து மீட்க உதவும். ஆவாரம்பூவை துவையல், சட்னி, சாம்பார் என பல வழிகளில் சமைத்துச் சாப்பிடலாம்.
ஃபேட்டி லிவர் பிரச்சினைக்கு எலுமிச்சை ஜூஸ், புதினா ஜூஸுடன் தேன் சேர்த்துக் குடிக்கலாம். எலுமிச்சை ஜூஸுடன் தக்காளிச் சாறு, தேன் சேர்த்தும் குடிக்கலாம். இதுபோன்று இன்னும் பல எளிமையான வழிமுறைகள் இருக்கின்றன. கல்லீரல் கோளாறுகளில் இருந்து முழுமையாக மீண்டு வரலாம்.

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

9 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

11 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

21 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago