Advertisement
உடல்நலம்

சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை தீர்க்கும் அற்புத பூக்கள்!

Advertisement

மல்லிகைப்பூ, மருதாணி, தாமரைப்பூ என பல்வேறுவிதமான பூக்களுக்கு மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. அவை குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

செம்பருத்தி, ஆவாரம்பூ

ரத்த அழுத்தம், படபடப்பு உள்ளிட்ட இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப்பூக்களை மென்று தின்றால் நிவாரணம் கிடைக்கும். இதேபோல் மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பைப் பிரச்சினை உள்ளவர்களும் இதேபோல் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் ஆவாரம்பூக்களை நீர் அல்லது பாலில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் பலன் கிடைக்கும். பருப்புடன் ஆவாரம்பூவைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தாலும் காலப்போக்கில் சர்க்கரை நோய் விலகும்.

Advertisement

தாமரை, முருங்கைப்பூ

இதய நோயாளிகள் தாமரைப்பூவின் இதழ்களை உலர்த்திப் பொடியாக்கி ஒன்றரை டீஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
விந்து முந்துதல், விந்தணுக் குறைபாடு உள்ளவர்கள் முருங்கைப்பூக்களுடன் பால், பாதாம் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

மல்லிகை மருதாணிப்பூ

சிறுநீரகக் கல் பாதிப்புக்கு ஆளானவர்கள் மல்லிகைப்பூக்களை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி இரண்டு சிட்டிகை

Advertisement
பொடியை நீரில் கரைத்துக் குடித்து வந்தால் பிரச்னை தீரும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மனநல பாதிப்புக்கு ஆளானவர்கள் மருதாணிப்பூக்களை தலையணையில் வைத்து தூங்கினால் பலன் கிடைக்கும்.

துத்தி தும்பைப்பூ

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கைப்பிடி அளவு

Advertisement
துத்திப்பூக்களை பசும்பாலில் போட்டு கொதிக்கவைத்து சர்க்கரை சேர்த்துக் குடித்தால் நிவாரணம் கிடைக்கும். சளித்தொல்லை, குறட்டையால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூக்களை பாலில் வேக வைத்து வடிகட்டி அருந்துவதன்மூலம் பலன் அடையலாம்.

தூதுவளை வேப்பம்பூ

ஆண்மைக்குறை உள்ளவர்கள் தூதுவளைப்பூக்களை நெய் விட்டு வதக்கியோ, பாலில் வேக வைத்தோ சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். பொடுகு பிரச்னை உள்ளவர்கள் 50 கிராம் வேப்பம்பூவை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி பொறுக்கும் சூட்டில் தலைக்குத் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

Advertisement
Maria Bellsin

Recent Posts

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

20 நிமிடங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

28 நிமிடங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

51 நிமிடங்கள் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

2 மணி நேரங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

3 மணி நேரங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

5 மணி நேரங்கள் ago