பனைமரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கானது நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது அம்மை போன்ற நோய் ஏற்படமால் தடுக்கும் தன்மை கொண்டது. அதோடு அல்லாமல் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது நீர் வகையை சேர்ந்த உணவு என்பதால் இது உடலில் இருக்கும் கொழுப்பினை அகற்றி உடல் எடையை குறைக்க வழி வகுக்கிறது. நுங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனாலும் குழந்தைகளை சாப்பிட வைக்க சவாலாக இருக்கும் அம்மாக்கள் நுங்கை மில்க் ஷேக்கை செய்து கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு வேண்டிய ஆரோக்கியம் தடையில்லாமல் கிடைக்கும். மில்க் ஷேக் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானம்.
பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. உடல் சூட்டை தணிக்க நமக்கு கம்பங்கூழும், கேப்பைக்கூழும், பழைய சோறும் என்பது போன்று குழந்தைக்கு குளிர்ச்சியளிக்க நுங்கு ஷேக் போதும். அதனால் நுங்கை கொண்டு மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையான இந்த நுங்கு மில்க் ஷேக் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
நுங்கு மில்க் ஷேக் | Ice Apple Milkshake Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கண்ணாடி டம்ளர்
தேவையான பொருட்கள்
- 10 நுங்கு
- 2 கப் பால்
- 3/4 கப் சர்க்கரை
- 3 ஏலக்காய்
- 4 பாதாம்
- 4 முந்திரி
- 1/4 கப் ஐஸ் கட்டிகள்
செய்முறை
- முதலில் நுங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் நுங்கு, ஏலக்காய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு பாலை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- பின் இதனை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி ஐஸ் கட்டிகள் போட்டு அதன் மேல் நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் சிறிதளவு நறுக்கிய நுங்கு துண்டுகளை சேர்த்து கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான நுங்கு மில்க் ஷேக் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுவையான பேரிச்சை பழ மில்க் ஷேக் இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு கூட மிஞ்சமிருக்காது!