மீதமான இட்லியை என்ன செய்றதுனு யோசிட்டே இருக்காம சட்டுனு இப்படி இட்லி 65 ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

காலையில் சுட்ட இட்லி மீதமானால் மாலையில் அது உப்புமாவாகவோ அல்லது வேறு ஒரு ஸ்நாக்ஸ் ஆகவோ மாறி விடும். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் மீந்து போன இட்லியை வைத்து ஒரு அருமையான இட்லி ௬௫ செய்ய முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இப்படி மட்டும் நீங்க இட்லி ௬௫ செஞ்சி கொடுத்தீங்கன்னா குழந்தைங்க தினமுமே இதை செஞ்சு கொடுக்க சொல்லி கேட்பாங்க. அந்த அளவுக்கு சுவை அட்டகாசமா இருக்கும்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் வகைகளில்,65அடங்கும். இந்தப் இட்லி 65. சுவையானது, மிகவும் ஆரோக்கியமானதும் கூட. நம்மில் பலபேர் பன்னீர் 65, மஸ்ரூம் 65 என்றாலே, அதை ரெஸ்டாரண்டுக்கு சென்று, சாப்பிடுவதை தான் விரும்புவோம். காரணம், அதன் சுவை வீட்டில் செய்தால், கடையில் செய்தது போல் ருசியாக இல்லை என்ற காரணத்தால்! ஆனால் கடையில் கிடைக்கும், அதே சுவையில் நம் வீட்டிலும் இட்லி 65 மசாலா சுலபமாக, ஆரோக்கியமாக செய்ய முடியும். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

இட்லி 65 மசாலா | Idly 65 Masala Recipe In Tamil

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் வகைகளில்,பன்னீர் 65அடங்கும்.இந்தப் இட்லி 65. சுவையானது, மிகவும் ஆரோக்கியமானதும் கூட. நம்மில் பலபேர் பன்னீர் 65, மஸ்ரூம் 65 என்றாலே, அதை ரெஸ்டாரண்டுக்கு சென்று, சாப்பிடுவதை தான் விரும்புவோம்.காரணம், அதன் சுவை வீட்டில் செய்தால், கடையில் செய்தது போல் ருசியாக இல்லை என்ற காரணத்தால்!ஆனால் கடையில் கிடைக்கும், அதே சுவையில் நம் வீட்டிலும் இட்லி 65 சுலபமாக, ஆரோக்கியமாகசெய்ய முடியும். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Idly 65 Masala
Yield: 4
Calories: 132kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 இட்லி
  • கடலை மாவு சிறிதளவு
  • மிளகாய் தூள் சிறிதளவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • சீரகம் சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது
  • மல்லித்தழை சிறிதளவு

செய்முறை

  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் சாறாக அடிக்கவும். இட்லியை ஒரு இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலைமாவையும் மிளகாய்தூளையும் (நீர் சேர்க்காமல்) கலந்துகொள்ளவும். இட்லி துண்டுகளின் மேல் இந்தக் கடலைமாவுக் கலவையை சிறிதளவு தூவிப் பிசறி, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
  • பிறகு,வேறொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வெங்காயத்துண்டுகளை சேர்த்து வதக்கவும் அதி தக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டியானவுடன், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை இதி போட்டு ஒரு புரட்டு புரட்டி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கினால், அதுதான் சுவையான இட்லி 65'.

Nutrition

Serving: 100g | Calories: 132kcal | Carbohydrates: 65g | Protein: 5g | Sodium: 121mg | Potassium: 21mg