பணியாரம் அப்படின்னாலே எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். பணியாரம் பல வெரைட்டிகள் இருக்கு அது மட்டுமில்லாமல் பல விதமான மாவுகளை யூஸ் பண்ணியும் நம்ம பணியாரம் செஞ்சுட்டு இருப்போம். ஆனால் என்ன இதுக்கான மாவு தயார் பண்றது கஷ்டம் அப்படின்னு நினைச்சீங்கன்னா உங்களுக்கு தான் இந்த ஈஸியான சுலபமான பணியாரம் பண்ணக்கூடிய ரெசிபி.
வீட்ல இட்லி மாவு இருக்கா அப்ப ரொம்பவே ஈஸிங்க நீங்க ரொம்ப ரொம்ப சுலபமா இந்த இனிப்பு பணியாரத்தை செய்து கொடுத்துடலாம். இதுல இட்லி மாவுல தான் செய்தீங்க என்கிற அளவுக்கு யாருக்குமே தெரியாது அந்த அளவுக்கு சுவை வந்து ரொம்பவே சூப்பரா இருக்கும். குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க இந்த சுவையான இனிப்பு பணியாரத்தை. ரொம்பவே சிம்பிளா பண்ணி முடிச்சிடலாம் எல்லாருக்கும் பணியாரம் பிடிக்குது ஆனால் சில கார பணியாரம் சிலருக்கு இனிப்பு பணியாரம் பிடிக்கும். அப்படி என்ன தான் கார பணியாரம் செய்து சட்னி வைத்து சாப்பிட்டாலும் நிறைய பேருக்கு பிடிக்கிறது நம்ம இனிப்பு பணியாரத்தான்.
அப்படி இனிப்பு பணியாரம் பிடிக்குது அப்படினா அவங்களுக்காகவே இந்த சுலபமான ரெசிபி ரொம்பவே ஈஸியா வீட்ல செய்திரலாம். இந்த இனிப்பு பணியாரத்துக்கு தேவையான பொருள் ஒரு நாலே நாலு பொருள் தான். அந்த பொருளை வைத்து ரொம்ப சுவையா இந்த இனிப்பு பணியாரத்தை செய்து கொடுத்தீங்கன்னா கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது அப்படியே காலியா போயிடும் . சரி வாங்க எப்படி இட்லி மாவு வச்சு சுவையான இனிப்பு பணியாரம் செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
இனிப்பு பணியாரம் | Innipu paniyaram recipe in tamil
Equipment
- 1 பணியார கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 கப் இட்லிமாவு
- 2 ஸ்பூன் கோதுமை மாவு
- 4 ஸ்பூன் அரிசி மாவு
- 1 கப் வெல்லபாகு
- 1 கப் தேங்காய் துருவல்
- 1/4 சிட்டிகை ஏலக்காய் தூள்
- நெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக்கொள்ள வேண்டும் அதில் 2 ஸ்பூன் அரிசி மாவு, கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
- பிறகு அதில் காய்ச்சி வைத்துள்ள வெல்லப்பாகை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். வெல்லம் பாகுபதம் வரவேண்டும் என்று அவசியம் இல்லை நன்றாக கொதித்தால் மட்டும் போதும்.
- பாகை சேர்த்த பிறகு மாவு சற்று இளகி இருக்கும் அது பணியாரம் சுடும் பதத்திற்கு வருவதற்கு தேவைப்பட்டால் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் .
- பிறகு அதில் தேங்காய் பூ துருவலை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்பு இதில் ஏலக்காய் தூள் சேர்த்த நன்றாக கலந்துவிட்ட வேண்டும்.
- பிறகு அடுப்பில் பணியாரம் சுடும் கல்லை வைத்து குழிகளில் பணியாரம் சுடுவதற்கு தேவையான அளவு நெய்யை ஊற்றி வேண்டும்.
- பணியாரக் கல் சூடு வந்த பிறகு கலந்து வைத்துள்ள பணியார மாவை சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு புறம் வெந்த பிறகு மறுப்புறம் திருப்பி போட்டு வேகவைத்து பரிமாறினால் சுவையான இட்லி மாவில் செய்த இனிப்பு பணியாரம் தயார்.