ஜிலேபியை இனிமேல் கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை! தித்திக்கும் சுவையில் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம்!

- Advertisement -

பண்டிகை காலங்களில் நம் வீடுகளில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு இனிப்பு என்றால் அது ஜிலேபி. பல வண்ணங்களில் பல சுவைகளில் இருக்கும் இந்த ஜிலேபி ஒரு சிலரது ஃபேவரட் ஆகவே இருக்கும். அந்த அளவிற்கு விரும்பக்கூடிய இந்த ஜிலேபியை நாம் பெரும்பாலும் கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனால் இப்பொழுதெல்லாம் கடைகளில் வாங்கி உண்பது ஆரோக்கியம் மற்றதாக இருப்பதால் பெரும்பாலானோர் வீடுகளிலேயே அனைத்து இனிப்புகளையும் செய்து சாப்பிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

 முக்கியமாக குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பல இனிப்பு பண்டங்களை வீட்டிலேயே செய்து வருகிறார்கள். ஒரு சிலர் வீட்டில் செய்தாலும் ஒரு சிலருக்கு வீட்டில் செய்யக்கூடிய அளவிற்கு பக்குவமும் செய்முறையும் தெரிவதில்லை. அப்படியே ஒரு சிலர் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு நன்றாக சரியான முறையில் ஜிலேபி கிடைப்பதில்லை.

- Advertisement -

ஒரு சிலர் நினைப்பார்கள் ஜிலேபி செய்வது மிகவும் கடினம் என்று ஆனால் வெறும் நாலே பொருட்களை வைத்து கடைகளில் கிடைக்கக்கூடிய அதே சுவையில் ஆரோக்கியமான முறையில் நம்மால் வீடுகளிலேயே செய்ய முடியும். ஆரஞ்சு கலரில் சர்க்கரை பாகு சொட்ட சொட்ட இருக்கக்கூடிய அந்த ஜிலேபியின் சுவை நம் நாடக்கிலேயே நடனமாடும்.

அந்த அளவிற்கு நம்மால் வீடுகளிலேயே ஒரு அருமையான ஜிலேபியை செய்து ருசிக்க முடியும். உளுத்தம் பருப்பை மட்டுமே முதன்மையான பொருளாக வைத்து நாம் செய்யப்போகும் இந்த ஜிலேபி அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். எளிமையான முறையில் பண்டிகை காலத்திற்கு ஏற்ப வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த ஜிலேபியை எப்படி சுலபமாக செய்வது என்று பார்க்கலாம் வாங்க

Print
No ratings yet

ஜிலேபி | Jalebi Recipe In Tamil

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பல இனிப்பு பண்டங்களை வீட்டிலேயே செய்து வருகிறார்கள். ஒரு சிலர் வீட்டில் செய்தாலும் ஒரு சிலருக்கு வீட்டில் செய்யக்கூடிய அளவிற்கு பக்குவமும் செய்முறையும் தெரிவதில்லை. அப்படியே ஒரு சிலர் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு நன்றாக சரியான முறையில்ஜிலேபி கிடைப்பதில்லை. எளிமையான முறையில் பண்டிகை காலத்திற்கு ஏற்ப வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த ஜிலேபியை எப்படி சுலபமாகசெய்வது என்று பார்க்கலாம் வாங்க
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: jalebi
Yield: 4
Calories: 345kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் உளுத்தம் பருப்பு
  • 1 கப் பச்சரிசி
  • 3 கப் சர்க்கரை
  • 1 சிட்டிகை கேசரி பவுடர்
  • எண்ணெய் தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் பச்சரிசியை மூன்றுமணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.அரைத்து வைத்துள்ள மாவில் கேசரி பவுடரை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய் ஊற்றி நன்றாக காய வைக்க வேண்டும்.
  • ஒரு எண்ணெய் கவர் அல்லது பால் கவரிங் நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்த கவரிங்நுனியில் ஒரு சிறிய ஓட்டை போட வேண்டும்.
  • அந்த கவரில் தயார் செய்து வைத்துள்ள மாவை போட்டு எண்ணெயில் தேவையான வடிவத்தில் பிழிந்து நன்றாகவேக வைத்து மொறுமொறுப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.
  • அதனை கரைத்து வைத்துள்ள சர்க்கரை பாகில் போட்டு ஊற வைக்க வேண்டும்.ஒரு மணி நேரம் நன்றாக உரிய பெண்எடுத்தால் சர்க்கரை பாகு சொட்ட சொட்ட ஒரு சுவையான பண்டிகை கால ஜிலேபி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 345kcal | Carbohydrates: 13.5g | Cholesterol: 5.4mg | Sodium: 231mg | Potassium: 456mg | Calcium: 456mg

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பன்னீர் ஜிலேபி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!!

-விளம்பரம்-