Advertisement
அசைவம்

கச்சிதமான காக்கிநாடா சிக்கன் கிரேவி ஒரு தரம் இப்படி காரசாரமான ருசியில் செஞ்சி பாருங்க!

Advertisement

இன்னைக்கு நம்ம ருசியான காக்கி நாடா சிக்கன் கிரேவி எப்படி காரசாரமா எப்படி செய்றதுனு தெரிஞ்சிக்க போறோம். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷலான மசாலாக்கள் பயன்படுத்தி செய்வாங்க. அந்த மாதிரி இந்த முறை காக்கிநாடாவில் எப்படி சிக்கன் கிரேவி ரொம்பவே ருசியா பண்ணுவாங்கலோ அது மாதிரி இப்போது நாம பண்ணப்போறோம்.

ரொம்ப ருசியா சாதத்துக்கும் இட்லி, தோசை, டிபன் ஐட்டத்துக்குமே ரொம்பவே சுவையாக இருக்கும். இத சாதத்துக்கும் சேர்த்து சாப்பிடும்போது ரொம்பவே அருமையா இருக்கும். இந்த காக்கி நாடா சிக்கன் கிரேவி ரொம்ப மசாலாக்கள் நிறைய போடாம கம்மியான மசாலாக்களை யூஸ் பண்ணி ரொம்ப டேஸ்ட்டா நம்ம பண்ண போறோம். இந்த ருசியான காக்கிநாடா சிக்கன் வீட்ல இருக்க எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. சிக்கன் ரொம்ப புடிக்கும் இந்த மாதிரி சிக்கன்ல வெரைட்டியான டிஷ் செஞ்சு கொடுத்தாலும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

Advertisement

அதனாலதான் நிறைய நிறைய சிக்கன் உணவுகளை புதுசா சேர்ந்து செய்து கொடுக்கும் பொழுது வீட்ல இருக்குற சிக்கன் பிரியர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி  இந்த மாதிரி  காக்கி நாடா சிக்கன் செய்து கொடுங்கள் அப்படின்னு சொல்லி கேட்டு தொல்லை பண்ணிட்டே இருக்க போறாங்க. சரி இந்த காக்கிநாடா சிக்கனை எப்படி ருசியா செய்வது என்று தெரிந்துகொள்ள இருக்கோம் வாங்க பார்க்கலாம்.

காக்கிநாடா சிக்கன் கிரேவி | Kaakinada Chicken Gravy

Print Recipe
ரொம்ப ருசியா சாதத்துக்கும் இட்லி, தோசை, டிபன் ஐட்டத்துக்குமே ரொம்பவே சுவையாக இருக்கும். இத சாதத்துக்கும் சேர்த்துசாப்பிடும்போது ரொம்பவே அருமையா இருக்கும். இந்த காக்கி நாடா சிக்கன் கிரேவி ரொம்ப மசாலாக்கள் நிறைய போடாம கம்மியான மசாலாக்களை யூஸ் பண்ணி ரொம்ப டேஸ்ட்டா நம்ம பண்ண போறோம். இந்த ருசியான காக்கிநாடா சிக்கன் வீட்ல இருக்க எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. சிக்கன் ரொம்ப புடிக்கும் இந்த மாதிரி சிக்கன்ல வெரைட்டியான டிஷ் செஞ்சு கொடுத்தாலும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword tamilnadu
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 99.9

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 துண்டு பட்டை
  • 1 பிரியாணி பிரியாணி இலை
  • 3 கிராம்பு
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 5 சின்ன வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • 5 முந்திரி
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 1/2 எலுமிச்சை பழம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

மசாலா அரைக்க

  • 1 பட்டை
  • 1 பிரியாணிஇலை
  • 1 ஜாதிபத்ரி
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 1 ஸ்பூன் நெய்
  • 2 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து சிக்கன் சேர்த்துக் கொள்ளவும்.
  • இந்த சிக்கனோடு பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சிக்கன் வேகுவதற்கு தேவையான தண்ணீரை சேர்த்து வேக வைக்கவும்.
    Advertisement
  • ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி , பூண்டு தக்காளி, முந்திரி சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் நன்றாக மைய அரைப்பதற்கு நீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கலந்து விடவும். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு அதில் குக்கரில் இருந்து வேகவைத்துள்ள சிக்கனை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து விடவும். சிக்கன் வேக வைத்த தண்ணீரை தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்ரி, பிரியாணி இலை சேர்த்துக் கொள்ளவும்.
  • இதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகு, சீரகம் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் உள்ள சிக்கனை கலந்து விட்டுக் கொண்டு அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை அதில் சேர்த்து நன்றாக இரண்டு நிமிடம் கலந்து விடவும்.
  • பிறகு சிக்கன் வேக வைத்த தண்ணீரை இதில் கலந்து மூடி போட்டு கொதிக்க விடவும்.சிக்கன் கிரேவியான பிறகு அதில் நெய், கொத்தமல்லி தழை தூவி இறக்கினால்.சுவையான காக்கிநாடா சிக்கன் கிரேவி தயார்.
  • இந்த காக்கி நாடா சிக்கன் கிரேவி இட்லி, தோசை , பூரி, சப்பாத்தியுடன் அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 99.9kcal | Carbohydrates: 13.9g | Protein: 3.4g | Sodium: 54.88mg | Potassium: 77.9mg | Fiber: 1.27g | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 0.21mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

4 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

11 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

22 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago