பெரும்பாலும் நாம் அனைவருமே கடன் வாங்கி தான் நமது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் எல்லாம் வாங்கிய கடனை சரியான நேரத்தில் அடைத்து விடுகிறோம். ஆனால் ஒரு சிலர் கடன் வாங்கும்போது அவர்களது நேரம், காலம், சூழ்நிலைகள் சரியில்லாத போது அவர்கள் மீண்டும் அந்த கடனிலேயே சிக்கிக் கொண்டு மீள முடியாத கடன் சுமையை சுமந்து கொண்டு வாழ்க்கை முழுவதும் பயணிக்க வேண்டி இருக்கிறது. அதற்காக அவர்களிடம் பணமே இருக்காதா என்று கேட்டால் ஆனால் பணம் இருக்கும் அவர்களது வாழ்க்கைக்கு தேவையான அளவு இருக்கும். ஆனால் கடன் தொகையை அடைக்க முடியாமல் காலம் முழுவதும் வட்டியை மட்டும் கட்டிக் கொண்டே இருப்பார்கள். இதுபோன்று மீள முடியாத கடனில் இருப்பவர்களை அதிலிருந்து மீண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் நாம் காரணம் வாருங்கள்.

அஸ்தம் நட்சத்திரம்
அதனால் பல வருடக் கணக்காக, மாத கணக்கில் ஏதோ தொடர்கதை போல் நீண்டு கொண்டே போன உங்கள் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் முதலில் நீங்கள் கடன் வாங்கும் தேதியில் என்ன நட்சத்திரம் என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நான் சொல்லும் இந்த நட்சத்திரம் இருக்கும் நாளில் தயவு செய்து கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். ஆம் அஸ்தம் நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் கடன் வாங்கினால் அந்த கடன் உங்களை மீள முடியாத துயரத்தில் கொண்டு போய் நிறுத்தி விடும். அதனால் கடன் வாங்குவதற்கு முன்பு இன்றைக்கு என்ன என்ன நட்சத்திரம் என்பதை காலண்டர் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மேலும் அவசர காலத்தில் மருத்துவ செலவுக்காக முயற்சி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு கடன் வாங்கும் போது இதைப்பற்றி யோசிக்க தேவையில்லை.

பரிகாரம்
அதாவது நீங்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் லோன் வாங்குவது வட்டிக்கு கடன் வாங்குவது எப்படி உங்கள் தேவைக்கு கடன் வாங்கும்போது மட்டும் இந்த நட்சத்திரத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சரி ஏதோ ஒரு இக்கட்டான நிலையில் ஒரு காரணத்திற்காக பணமாக கடன் வாங்கி விட்டோம் ஆனால் தற்சமயம் அந்த கடனை உங்களால் திருப்பி அடடைக்கவே முடியவில்லை இன்று கஷ்டப்படுகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு எளிமையான பரிகாரம் தீர்வாக உள்ளது அது என்ன பரிகாரம் வாருங்கள் பார்க்கலாம்.
16 வாரங்கள் செவ்வாய்
நீங்கள் உங்கள் கடன் பிரச்சனையே தீர்ப்பதற்கு செய்யப் போகும் இந்த பரிகாரத்தை நீங்கள் செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும் அதுவும் 16 வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சரிசி மாவு, சிறிது நாட்டு சக்கரை மற்றும் ஏலக்காய் பொடி இல்லையென்றால் இரண்டு ஏலக்காய் எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள் இப்போது இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

தானம் செய்யுங்கள்
இந்த கலவையை பார்க்கும் போது சாமிக்கு வைக்கும் பிரசாதம் போல இருக்கும் ஆம் இது இதை கொண்டு போய் விநாயகருக்கு நிவேதனம. செய்யுங்கள். அதன் பிறகு இந்த நிவேதனத்தை எடுத்துச் சென்று உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் எறும்பு புற்றில் இருக்கும் எறும்புகளுக்கு தானமாக உங்கள் கையால் போடுங்கள். இப்படி எறும்புகளுக்கு தானமாக இந்த கலவையை வைக்கும் போது நீங்கள் மனதார விநாயகர் மற்றும் மகாலட்சுமி தேவியை நினைத்து இந்த கடன் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள் உங்களுடைய அனைத்து விதமான கடன் பிரச்சனையும் தீர்ந்துவிடும்.
ஆம் அது எவ்வளவு பெரிய கடன் தொகையாக இருந்தாலும் நிச்சயமாக தீர்க்கப்படும் நீங்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து 16 வாரங்கள் செய்து வாருங்கள் நீங்கள் ஒவ்வொரு வாரமும் இந்த பரிகாரம் செய்யும் பொழுது உங்கள் கடன் தொகை சிறிது சிறிதாக குறைவதை உங்களால் உணர முடியும் நீங்கள் நீண்ட காலமாக திருப்பி அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்த கடனை அடைத்து விட்டு மீள முடியாமல் இருந்த கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து விடுவீர்கள். அதனால் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.