Advertisement
ஆன்மிகம்

வாங்கிய கடன் விரைவில் அடைபட வேண்டுமா? இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க

Advertisement

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெரியோர்களின் கட்டளை. பசியோடு கூட உறங்கலாம், கடனோடு உறங்காதே என்பது ஆன்மிகம் காட்டும் அறிவுரை.

பொதுவாக நம் வீட்டில் எவ்வளவு தான் பணம் தந்தாலும் அதற்கு செலவுகளும் வந்து கொண்டே தான் இருக்கும். பணத்தை சேமிக்க நாம் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் சில சமயங்களையும் நம்மால் பணம் சேர்க்கவே முடியாது. அந்த மாதிரியான சூழ்நிலைகளில் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த சில எளிமையான பரிகாரங்களை தாந்த்ரீக பரிகாரங்களை செய்வதன் மூலம் நம் வீட்டில் கடன் பிரச்சினைகளும் செலவுகளும் படிப்படியாக குறைய தொடங்கும்.

Advertisement

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன், வியாதி போன்ற கர்மவினைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும். உங்கள் கடன்களில் இருந்து விடுபட இந்த மைத்ர முகூர்த்ததை கடைபிடியுங்கள். அதாவது யார் எல்லாம் கடன் பிரச்சனையால் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

மைத்ரேய முகூர்த்தம்

அஸ்வினி நட்சத்திரமும் மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு ‘மைத்ர முகூர்த்தம்’ என்று பெயர். இந்த முகூர்த்தத்தில் கடனின் ஒரு சிறு தொகையை கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் விரைவில் தீர்ந்துவிடும். அத்துடன் செவ்வாயின் நட்சத்திரமும் சனிக் கிழமையும் இணைந்த நாளில் மேஷ, விருச்சிக லக்னத்திலும் கடனை தீர்க்கலாம்.

ஏப்ரல் மாதம் மைத்ரேய முகூர்த்தம்

மாதத்திற்கு இரண்டு முறை மைத்ரேய முகூர்த்தம் வரும். மைத்ரேய முகூர்த்தம் என்பது 2 மணி நேரம் கொண்ட காலமாகும். இந்த 2 மணி நேரத்தை கடனை வாங்குவதற்கும், திருப்பி செலுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 9-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7:32 மணி முதல் 8:06 வரை மைத்ரேய முகூர்த்தம் நேரம் இருக்கின்றது.‌ இரண்டாவது மைத்ரேய முகூர்த்தம்

Advertisement
ஏப்ரல் 26ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் இரவு 07.35 முதல் 09.46 வரையிலான நேரம் மைத்ரேய முகூர்த்தம் உள்ளது. இந்த நேரத்தில் வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தலாம்.

பரிகாரம் செய்யும் முறை

எவ்வளவோ பெரிய கடனாக இருந்தாலும் இந்த நேரத்தை பயன்படுத்தி நாம் கடன் அடைக்கும் பொழுது எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் நமக்கு அடைந்து விடும். யாராக இருந்தாலும்

Advertisement
மொத்த கடனையும் திரும்ப அடைத்து விட வேண்டும் என்று தான் விரும்புவார்கள் ஆனால் அது நம்மளால் இயலாது. அதனால் நாம் கடன் அடைப்பதில் சிறு தொகையை நமது வீட்டிலேயே எடுத்து வைக்க வேண்டும். அப்படி எடுத்து வைக்கும் பொழுது நாம் கடன் வாங்கிய நபரின் பெயரை ஒரு மொய்க்கவரில் எழுதிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் மைத்ரேய முகூர்த்த‌ நேரம் வரும். இந்த மாதத்தில் நாம் சிறிதளவு பணத்தை எடுத்து வைக்க வேண்டும். அதாவது 100 ரூபாயோ அல்லது 500 ரூபாயோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அல்லது மைத்ரேய முகூர்த்தில் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து, விரைவில் கடனை திரும்ப செலுத்தும் நிலை ஏற்பட வேண்டும் என வேண்டிக் கொண்டு ஒரு மஞ்சள் துணியில் ரூ.11 காணிக்கையை முடிந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதனையும் நாம் மைத்ரேய முகூர்த்த நேரத்தில்தான் செய்ய வேண்டும். இந்த நேரத்தை பயன்படுத்தி உங்கள் வேண்டுதல்களை நீங்கள் செய்யும் பொழுது உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் பலிக்க ஆரம்பிக்கும். படிப்படியாக கடன் தொல்லையில் இருந்து விடுபடும் சூழல் ஏற்படும்.

இதனையும் படியுங்கள் : கடன் தொல்லைகள் நீங்கி வருமானம் பெருக வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போது!

Advertisement
Prem Kumar

Recent Posts

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

2 மணி நேரங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

6 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

6 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

6 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

17 மணி நேரங்கள் ago