காலை டிபனுக்கு மொறு மொறுனு கடப்பா காராமணி வடை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

வடை அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் மழை நேரத்தில் சுட சுட வடை சாப்பிடணும் அப்படின்னு நினைச்சாலே சும்மா சூப்பரான ஒரு ஃபீல் வரும். அந்த மாதிரி சூப்பரா ஒரு வடை ஹெல்த்தியான எப்பவுமே உளுந்து வடை, கடலை பருப்பு வடை இப்படி வடைகள் சாப்பிட்டுட்டே இருக்குற நமக்கு புதுசா காராமணியில் ஒரு வடை செஞ்சு சாப்பிட்டா எப்படி இருக்கும். அதாங்க தட்டப்பயிறு தான் நம்ம காராமணி பயிறு. தட்ட பயிர்ல வடை செய்தா எப்படி இருக்கும்.

-விளம்பரம்-

அதுவும் புதுசா ஒரு ஊர் ஸ்டைல்ல பண்ண போறோம். அது என்ன ஊருன்னா கடப்பா தான். கடப்பால பண்ற மாதிரியான வெள்ளை காரமணி வடை எப்படி செய்யலாம் அப்படின்னு பாக்குறதுக்கு இருக்கும். இந்த சுவையான ருசியான வெள்ளை காராமணி வடையை செய்து சாப்பிடும்போது அவ்வளவு டேஸ்டா இருக்கும். ரொம்ப எல்லாம் இல்லைங்க ரொம்பவே ஈசியா இந்த வடைய செய்திரலாம். ஆனால் என்ன காராமணிய மட்டும் நைட் ஃபுல்லா ஊற வைக்கணும். மத்தபடி வேற எந்த வேலை இருக்காது. ரொம்பவே ஈஸியா செய்து முடித்திடலாம் இந்த சுவையான காராமணி வடையை.

- Advertisement -

இந்த சுவையான காராமணி வடை ரொம்பவே ஆரோக்கியமானதும் டேஸ்டியானதும் கூட .இந்த சுவையான காராமணி வடை எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. எப்பவும் உளுந்து வடை, வாழைப்பூ வடை, கடலை பருப்பு வடை செய்து கொடுக்கும்போது இதோட டேஸ்ட்டும் வித்தியாசமா இருக்கும். சாப்பிடும்போது ரொம்பவே வித்தியாசமா இருக்கு அதனால விரும்பியும் சாப்பிடுவாங்க. அதுவும் இந்த மழை டைம்ல மாலை நேர சிற்றுண்டிகள் எல்லாமே ரொம்பவே ருசியாக இந்த மாதிரி வடை செய்து கொடுக்கும்போது அங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க . சரி வாங்க எப்படி இந்த கரகர மொறுமொறு கடப்பா காராமணி வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கடப்பா காராமணி வடை | Kadappa Karamani Vadai in Tamil

வடை அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் மழை நேரத்தில் சுட சுட வடை சாப்பிடணும் அப்படின்னு நினைச்சாலே சும்மா சூப்பரான ஒரு ஃபீல் வரும். அந்த மாதிரி சூப்பரா ஒரு வடை ஹெல்த்தியான எப்பவுமே உளுந்து வடை, கடலை பருப்பு வடை இப்படி வடைகள் சாப்பிட்டுட்டே இருக்குற நமக்கு புதுசா காராமணியில் ஒரு வடை செஞ்சு சாப்பிட்டா எப்படி இருக்கும். அதாங்க தட்டப்பயிறு தான் நம்ம காராமணி பயிறு. தட்ட பயிர்ல வடை செய்தா எப்படி இருக்கும். அதுவும் புதுசா ஒரு ஊர் ஸ்டைல்ல பண்ண போறோம்.
Prep Time15 minutes
Active Time20 minutes
Course: evening, vadai
Cuisine: andhra
Keyword: Aval vadai, Fish Vadai, Kara Vadai
Yield: 6
Calories: 57kcal
Cost: 100

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் வெள்ளை காராமணி
  • 2 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகு
  • ஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • தேவையான அளவு உப்பு                             
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் வெள்ளை காராமணியை முதல் நாள் இரவில் இருந்து ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு மிக்க காலையில் ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள வெள்ளை காராமணியை சுத்தம் செய்துவிட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அத்தோடு இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால் வடை நன்றாக வரும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளலாம்.
  • பிறகு அரைத்து வைத்துள்ள காராமணி மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் தேவையான அளவு உப்பு மட்டும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் வடை மாவு தயார்.
  • இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து வடைகள் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு காராமணி வடை மாவை மெதுவடை செய்வது போல எடுத்து நடுவில் ஒரு ஓட்டை செய்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
  • ஒருபுறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வெந்த பிறகு எடுத்து சூடாக பரிமாறினால் சுவையான கரகர மறு மொறு கடப்பா காராமணி வடை தயார். இந்த வடைக்கு சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Nutrition

Calories: 57kcal | Carbohydrates: 36g | Protein: 17g | Fat: 47g