மொறு மொறுன்னு ஆரோக்கியம் நிறைந்த ருசியான கம்பு வடை சுலபமாக வீட்டிலேயே இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய தானிய வகைகளில் சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான உயிர் சத்துக்களும் நிறைந்ததாக தான் சிறுதானியங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு தானியம் தான் கம்பு. மற்ற எந்த தானியங்களிலும் இல்லாத அளவிற்கு புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடிய தானியமாகவும் இந்த கம்பு திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த கம்பை பயன்படுத்தி கம்பு வடை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி உண்பார்கள்.

-விளம்பரம்-

நிறைய இடங்களில் மொறுமொறுப்பாக கம்பு வடை. கடைகளில் சுட்டு விற்பனை செய்யும் வடையிலிருந்து வரக்கூடிய வாசமே நம்மை இழுக்கும். மூக்கைத் துளைக்கும். கட்டாயம் இதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று நாக்கு சொல்லும். ஆனால், அடிக்கடி இதை கடையில் வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. வீட்டிலேயே மொறு மொறுப்பாக சிறுதானிய வகைகளில் உள்ள கம்பு வைத்து வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

- Advertisement -
Print
No ratings yet

கம்பு வடை | Kambu Vada Recipe in Tamil

உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய தானிய வகைகளில்சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையானஉயிர் சத்துக்களும் நிறைந்ததாக தான் சிறுதானியங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும்முக்கியமான ஒரு தானியம் தான் கம்பு. மற்ற எந்த தானியங்களிலும் இல்லாத அளவிற்கு புரதச்சத்துஅதிகம் இருக்கக்கூடிய தானியமாகவும் இந்த கம்பு திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த கம்பைபயன்படுத்தி கம்பு வடை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பிஉண்பார்கள்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Kambu Vadai
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ கம்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

  • கம்பை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  • வெங்காயம்,பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும்.
  • மிக்ஸியில் ஊற வைத்த கம்பு, மிளகாய் வற்றல், சோம்பு சேர்த்து ரவை பதத்தில் அரைத்து எடுக்கவேண்டும். அரைக்கும் பொழுது சிறிது தண்ணீர் தௌpத்து கெட்டியாகஅரைக்கவேண்டும்.
  • அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நறுக்கி வைத்தவற்றை சேர்த்து அதோடு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசையவேண்டும், வாழை இலையில் எண்ணெய் தடவி எலுமிச்சை அளவு மாவை எடுத்து அதிரசம் தட்டுவது போல் தட்டி வைக்கவேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து தட்டிய வடைகளை போட்டு சிவக்க விட்டு எடுக்கவேண்டும். இப்போது சுவையான கம்பு வடை தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Saturated Fat: 84g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 0.1mg

இதையும் படியுங்கள் : மொறுமொறுன்னு குண்டு குண்டா முட்டைகோஸ் போண்டா நம்ம வீட்டிலயே இப்படி செய்து பாருங்க!