வீட்டில் பண கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க! நிலைவாசலில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்!

- Advertisement -

நாம் நன்றாக வளர்ந்து வருகிறோம் நமது வீட்டில் சில நாட்களாக பல விஷயங்கள் நல்லதாக நடந்து வருகிறது. சமுதாயத்தில் சற்று உயர்ந்த இடத்திற்கு வருகிறோம் என்ற நேரத்தில் திடீரென நம் வீட்டில் பல பிரச்சினைகள் வரத் தொடங்கும் திடீர் வறுமையை சந்திக்கலாம் திடீரென்று பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம் இதற்கெல்லாம் காரணம் கண் திருஷ்டியாக தான் இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறிது உயரும்போது கூட உங்களுடன் இருப்பவர்களால் அல்லது உங்கள் எதிரிகள் உங்களின் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் போது அல்லது அவர்களின் எதிர்மறையான எண்ணங்களால் உங்களின் மீதும் உங்கள் வீட்டின் மீதும் எதிர்மறை ஆற்றலாக சூழ்ந்து கொள்ளும்.

-விளம்பரம்-

கண் திருஷ்டி

இப்படி நம் வாழ்க்கையில் நம்மை கண்டு பொறாமையுடன் பார்ப்பவர்களின் கண் திருஷ்டி நம்மளை ஒரு பாடாய் படுத்தி எடுத்து விடும். இது போன்ற கண் திருஷ்டி பிரச்சனைகளில் இருந்து மீள வேண்டும் என விரும்புவார்களுக்காக தான் நம் முன்னோர்கள் மாதந்தோறும் அமாவாசை தினங்களில் பூசணிக்காய் எலுமிச்சைகள் போன்றவற்றை பயன்படுத்தி திருஷ்டி கழித்து வந்தனர். இப்படி இதுபோன்ற கண் திருஷ்டியை கழிக்க முடியாதவர்கள், நேரம் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

- Advertisement -

பரிகாரம்

இப்படி கண் திருஷ்டியை கழிப்பதற்கு சிவப்பு அல்லது கருப்பு நிற துணியை நீங்கள் பயன்படுத்தும் கைக்குட்டையின் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி எடுத்து வைத்திருக்கும் துணிய விரித்து வைத்து அதில் ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்து உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் வீட்டை சுற்றியும் மூன்று முறை வலது புறமாகவும், மூன்று முறை இடது புறமாகவும் சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பின் அந்த உப்பை அந்த துணியின் போட்டு அதனுடன் சிறிதளவு கடுகு அல்லது வெண்கடுகு போட்டு அந்த துணியை நன்கு முடிந்து கொள்ளுங்கள்.

நிலை வாசலில்

இப்படி நாம் தயார் செய்து முடிச்சை உங்கள் வீட்டின் நிலை வாசலில் இருக்கும் மரத்தில் ஆணி அடித்து அதில் மாட்டி விடுங்கள் மாதம் ஒருமுறை இப்படி பழைய முடிஞ்சை எடுத்து விட்டு புதிய முடிச்சை போட்டுக் கொள்ளுங்கள். பழைய முடிசிலிருந்து நீங்கள் எடுத்த உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து மனிதனின் காலடி படாத இடங்களில் ஊற்றி விடுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் அமாவாசை தினத்தில் தாராளமாக செய்யலாம் ஆனால் மற்ற நாட்களை விட அம்மாவாசை நாட்களில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பானதாக இருக்கும். இதை நீங்கள் மாலை 6 மணிக்கு மேல் உங்கள் நிலை வாசலில் கட்டிவிடலாம் இப்படி செய்யும்போது உங்களையும் உங்கள் வீட்டையும் எந்தவிதமான கண் திருஷ்டியும் நெருங்க விடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here