காலை உணாவாக எடுத்துகொள்ள சூப்பரான கவுனி அரிசி ஆப்பிள் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

நம்ம பொதுவா எப்பவுமே காலை உணவுக்கு இட்லி பொங்கல் வடை தோசை பூரி சப்பாத்தின்னு இதுதான் சாப்பிடுவோம் ஆனா இப்போ எல்லாருமே நிறைய டயட் கண்ட்ரோல்னால சாப்பாடு சாப்பிடுவதை கம்மி பண்ணிட்டு அதுக்கு பதிலா நிறைய ட்ரிங்க்ஸ் மாதிரி குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுலயும் இப்போ எல்லாம் சிறுதானிய கஞ்சி வச்சு குடிச்சா அது உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும்.

-விளம்பரம்-

ஆனா பெரியவங்களுக்கு சிறுதானிய கஞ்சி வச்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க ஆனா குழந்தைகளுக்கு இந்த மாதிரி வெறும் கஞ்சி வைத்து கொடுத்தால் கண்டிப்பா சாப்பிட மாட்டாங்க அடம்பிடிப்பாங்க அந்த மாதிரி இருக்க குழந்தைகளுக்கு காலை உணவா இல்ல காபி டீக்கு பதிலா இந்த கருப்பு கவுனி ஆப்பிள் மில்க் ஷேக் செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க அது ஒரு டம்ளர் மட்டும் நீங்க காலையில கொடுத்தா போதும் காலைல பிரேக்ஃபாஸ்ட்டா எதுவுமே சாப்பிட தேவை இல்லை.

- Advertisement -

அந்த ஒரு டம்ளர் மில்க் ஷேக் வயிறு ஃபுல்லா இருக்கும். அதே நேரத்துல நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு அது அவ்ளோ ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான ரொம்ப டேஸ்ட்டான எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த கருப்பு கவுனி ஆப்பிள் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

கருப்பு கவுனிஆப்பிள் மில்க் ஷேக் | Karuppu Kavuni Apple Milk Shake

குழந்தைகளுக்கு இந்த மாதிரி வெறும் கஞ்சி வைத்து கொடுத்தால்கண்டிப்பா சாப்பிட மாட்டாங்க அடம்பிடிப்பாங்க அந்த மாதிரி இருக்க குழந்தைகளுக்கு காலைஉணவா இல்ல காபி டீக்கு பதிலா இந்த கருப்பு கவுனி ஆப்பிள் மில்க் ஷேக் செஞ்சு கொடுங்ககண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க அது ஒரு டம்ளர் மட்டும் நீங்க காலையில கொடுத்தா போதும்காலைல பிரேக்ஃபாஸ்ட்டா எதுவுமே சாப்பிட தேவை இல்லை. இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான ரொம்ப டேஸ்ட்டான எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த கருப்புகவுனி ஆப்பிள் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Custard Apple Milk Shake
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 ஆப்பிள்
  • 1 கப் கருப்பு கவுனி அரிசி மாவு
  • 5 முந்திரி
  • 5 பாதாம்
  • 5 பிஸ்தா பருப்பு
  • 3/4 லிட்டர் பால்
  • 1 கப் நாட்டுச் சர்க்கரை

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் கருப்பு கவுனி அரிசி மாவு எடுத்து அதில் சிறிதளவு சுடு தண்ணீர் ஊற்றிநன்கு கலந்து கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து நன்றாக காய்ச்சி அதில் கலந்து வைத்துள்ள கருப்பு கவுனி அரிசி மாவை சேர்த்துகிளறவும்
  • ஆப்பிளை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் நீக்கி அதனை சிறுசிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்
  • பிறகு அதில் ஒரு டம்ளர் பால் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது காய்ச்சி ஆற வைத்துள்ள கருப்பு கவுனி அரிசி மாவு பால் அனைத்தையும் சேர்த்து மிக்ஸிஜாரில் அரைத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது ஒரு டம்ளரில் ஊற்றி மேலாக பாதாம் திராட்சை முந்திரி அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொண்டால் சுவையான கருப்பு கவுனி அரிசி மாவு ஆப்பிள் மில்க் ஷேக் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 112kcal | Carbohydrates: 3.6g | Protein: 4.5g | Sodium: 6mg | Potassium: 17mg | Vitamin A: 31IU | Vitamin C: 28mg | Calcium: 18.3mg | Iron: 2mg

இதையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!