- Advertisement -
மிகவும் சுவையான கேழ்வரகு அடை இதனை காலை நேரங்களில் டிபன் உடன் சாப்பிடுவதற்கும், மாலை வேலைகளில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடவும் ஏற்றதாக இருக்கும் மிகவும் சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாகும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : டீ கடை பருப்பு வடை ரகசியம் இதுதான்!
- Advertisement -
ஏன் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் .அதனால் இன்று இந்த சுவையான கேழ்வரகு அடை எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கேழ்வரகு அடை | kelvaragu Adai Recipe in Tamil
மிகவும் சுவையான கேழ்வரகு அடை இதனை காலை நேரங்களில் டிபன் உடன் சாப்பிடுவதற்கும், மாலை வேலைகளில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடவும் ஏற்றதாக இருக்கும் மிகவும் சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாகும். ஏன் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Yield: 4 People
Calories: 160kcal
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் கேழ்வரகு மாவு
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 1 பச்சை மிளகாய்
- 1 Tsp கடுகு
- 1 Tsp உளுந்த பருப்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- 1/2 Tsp சீரகம்
- 3/4 Tsp பெருங்காய தூள்
- எண்ணெய் சிறிது
செய்முறை
- கேழ்வரகு அடை செய்ய முதலில் வெங்காயம் பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் வேறு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு வெங்காயம்,பச்சை மிளகாய்,சீரகம், சீரகம் கறிவேப்பிலை குட்டி குட்டியாக நறுக்கிய பூண்டு உப்பு ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- தாளிக்கும் போது கடுகு உளுந்தம் பருப்பு பெருங்காயத்தூள் கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் தாளித்தவற்றை கேழ்வரகு கலவையில் ஊற்றி சிறிதளவு தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதம் அல்லாமல் லைட்டாக தண்ணீர் பதம் வரை பிசைந்து கொள்ள வேண்டும்.
- பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி கேழ்வரகு கலவையை பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தட்டிக்கொண்டு தோசை கல்லில் போட வேண்டும்.
- கேழ்வரகு தோசை ரெடியாக சிறிது நேரம் தேவைப்படும் அதுவரை அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். இப்பொழுது கேழ்வரகு அடை தயார்
Nutrition
Serving: 300G | Calories: 160kcal | Carbohydrates: 56g | Protein: 13g | Saturated Fat: 0.1g | Sodium: 3.1mg | Potassium: 381mg | Fiber: 1.5g | Sugar: 0.2g