மீந்து போன கிச்சடியில் சூப்பரான சீஸ் பால்ஸ் செய்து பாருங்க!!!எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவாங்க!

- Advertisement -

நமக்கு கிச்சடி அப்டினாலே சுத்தமா பிடிக்காது காரணம் உப்புபா கிச்சடி இரண்டுமே ஒன்னு தான் அப்படிங்குற மாதிரி எப்பவுமே இருக்கும். என்ன உப்புமால போடாது சில ஐட்டங்களை கிச்சடியில் சேர்த்து போட்டு செஞ்சு கொடுத்துடுவாங்க. ஆனால் இந்த உப்புமா கிச்சடி அப்படின்னா நம்ம எல்லாம் ஒரு எட்டு மைல் தூரம் எகிறி அடிச்சு ஓடிட்டுவோம். அந்த மாதிரி கிச்சடி மேல இருக்கிற வெறுப்பை இந்த மாதிரி சீஸ்பால் செய்து தனிச்சுக்கலாம். என்னம்மா இப்படி சொல்றீங்க சாப்பிடவே பிடிக்காத ஒரு விஷயம் அதில் பயந்து போன உணவை எப்படி ருசிக்க முடியும்.

-விளம்பரம்-

மீந்து போன கிச்சடியில எப்படி நீங்க சீஸ் பால் செய்து அத நாங்க எப்படி விருப்பப்பட்டு சாப்பிடுவோம் அப்படின்னு யோசிக்கிறீங்களா? ஆமாங்க கண்டிப்பா நீங்க இந்த சீஸ் போல விருப்பப்பட்டு தான் சாப்பிட போறீங்க. உப்புமால நம்ம சூப்பரான ஒரு சீஸ்பால்ஸ் செய்து சாப்பிடபோறோம் . அதுவும் அந்த உப்புமா சாப்பிட முடியல அப்படின்னு மீதிமான உப்புமா. மீந்து போன உப்புமால இன்னும் கொஞ்சம் சில ஐட்டங்கள் எல்லாம் சேர்த்து இப்படி சீஸ் பால் செஞ்சு சாப்பிட்டோம்னா சும்மா சூப்பரா இருக்கும்.. உடனே காலி ஆயிடும் அது மட்டும் இல்லைங்க நம்ம இந்த பால்ஸை கிச்சடியில தான் செஞ்சிருக்கோம்னு கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கும் இதோட சுவை.

- Advertisement -

அந்த மாதிரி ரொம்பவே டேஸ்டா இருக்கும் இந்த கிச்சடி சீஸ் பால்ஸ் அதுலயும் குழந்தைகள் சுத்தமாக கண்டுபிடிக்க மாட்டாங்க. அம்மா இது ரொம்ப சூப்பரா இருக்கு இதே மாதிரி டெய்லி கூட செஞ்சு குடுங்க அப்படின்னு கேக்குற அளவுக்கு நல்லா இருக்கும். அவங்க கிட்ட நீங்க உப்புமா மட்டும் வச்சிருந்தீங்கன்னா என்ன சொல்லுவாங்க ஒரு நாள் கூட இதை சாப்பிடவே முடியலம்மா அப்படின்னு சொல்றவங்க இப்படி சொல்லுவாங்க. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க அதுவும் நம்ம ஹஸ்பென்ஸ் எல்லாம் ஏமாற்றுவது ரொம்பவே ஈசியாய்டுங்க தினம் கிச்சடியும் பிடிக்காது. அவங்களுக்கு இந்த மாதிரி பண்ணி கொடுத்தா கிச்சடியும் காலியான மாதிரி ஆச்சு அவங்க மனசையும் ஜெயிச்ச மாதிரி ஆச்சு. சரி வாங்க சுவையான இந்த கிச்சடி சீஸ் பால் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Print
No ratings yet

கிச்சடி சீஸ்ஸபால்ஸ் | Kichadi cheese balls recipe in tamil

மீந்து போன கிச்சடியில எப்படி நீங்க சீஸ் பால் செய்து அத நாங்க எப்படி விருப்பப்பட்டு சாப்பிடுவோம் அப்படின்னு யோசிக்கிறீங்களா? ஆமாங்க கண்டிப்பா நீங்க இந்த சீஸ் போல விருப்பப்பட்டு தான் சாப்பிட போறீங்க. உப்புமால நம்ம சூப்பரான ஒரு சீஸ்பால்ஸ் செய்து சாப்பிடபோறோம் . அதுவும் அந்த உப்புமா சாப்பிட முடியல அப்படின்னு மீதிமான உப்புமா. மீந்து போன உப்புமால இன்னும் கொஞ்சம் சில ஐட்டங்கள் எல்லாம் சேர்த்து இப்படி சீஸ் பால் செஞ்சு சாப்பிட்டோம்னா சும்மா சூப்பரா இருக்கும்.. உடனே காலி ஆயிடும் அது மட்டும் இல்லைங்க நம்ம இந்த பால்ஸை கிச்சடியில தான் செஞ்சிருக்கோம்னு கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கும் இதோட சுவை.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: snacks
Cuisine: tamilnadu
Keyword: gothumai rava kichadi, Kichadi Rice, kichadika masala, Maggi Potato Balls, Pumpkin Kichadi
Yield: 8 People
Calories: 218kcal
Cost: 50

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் கிச்சடி
  • 1 கப் வெங்காயம்
  • 1/2 கப் குடைமிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 கப் சீஸ்
  • 1 கப் பிரட் தூள்
  • 1 முட்டை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கிச்சடியை தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்
  • பிறகு அந்த கிச்சடியில் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி சிறிதளவு உப்பு, வெங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்
  • பிறகு பிசைந்து வைத்துள்ள கிச்சடிகளை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்
  • பிறகு உருண்டைகளாக உருட்டி வைத்துள்ள கிச்சடியின் உள்ளே சிறு துண்டு சீஸ்ஸை வைத்து நன்றாக உருட்டி விட வேண்டும் இதே போல் அனைத்து கிச்சடி உருண்டைகளிலும் சீஸ்ஸை வைத்து உருட்டி எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்
  • பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்
  • எண்ணெய் காய்ந்த பிறகு சீஸ் வைத்த கிச்சடி உருண்டைகளை முட்டையில் நன்றாக படுமாறு பிரட்டி பிறகு பிரட் தூள் நன்றாக பிரட்டி விட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக இருபுறமும் வேகவைத்து எடுத்தால் சுவையான கிச்சடி சீஸ் பால் தயார்.

Nutrition

Calories: 218kcal | Carbohydrates: 15g | Protein: 6g | Fat: 18g