கொய்யா இலையை பயன்படுத்தி உங்கள் முகத்தை ஆழகாக மற்றலாம் தெரியுமா ?

- Advertisement -

நீங்கள் தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடம்பில் எவ்வளவு நன்மைகள் ஏற்படும் தெரியுமா ? அதே மாதிரி கொய்யாப்பழத்தின் இலைகளிலும் உங்கள் உங்கள் முகத்தை அழகாக வைத்திருப்பதற்கான பல நன்மைகள் இருக்கின்றது. நீங்கள் உங்கள் முகத்தை அழகாகவும் பொலிவுடன் வெள்ளையாக வைத்திருப்பதற்காக பியூட்டி பார்லர் சென்று பணத்தை விரையமாக்குவது மற்றும் மார்க்கெட்டில் விற்பனையாகும் ரசாயனங்கள் சேர்ந்த அழகு சாதனா பொருட்களை வாங்கி உபயோகிப்பது. இந்த ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகப்படுத்தும் போது அது உங்கள் சருமத்திற்கு தீங்கை விளைவிக்கும். இன்று கொய்யா இலையை பயன்படுத்தி உங்கள் முகத்தை அழகுடன் வைத்திருப்பது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள், அனைத்தையும் இந்த அழகு குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-

தேவையான பொருள்கள் :-

- Advertisement -

கொய்யா இலை – 15 இலைகள்
ரோஸ் வாட்டர் – சிறிது அளவு

செய்முறை 1 :-

முதலில் நாம் எடுத்து வைத்திருக்கும் கொய்யா இலைகளை ந்கு சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்

-விளம்பரம்-

செய்முறை 2 :-

பின்பு சுத்தப்படுத்திய இலைகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 3 :-

-விளம்பரம்-

இப்போது அரைத்து வைத்துள்ள கொய்யா இலையை ஒரு பவுளில் எடுத்துக் கொள்ளுங்கள் பின்பு இதனுடன் ரோஸ் வாட்டர் சிறிது அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

செய்முறை 4 :-

இப்பொழுது இந்த கலவையை உங்கள் முகத்தை நன்கு சுத்தமாக கழுவி எடுத்துக் கொண்டு முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

செய்முறை 5 :-

பின்பு நன்கு உலர விடுங்கள், 15 நிமிடம் கழித்து ஐஸ் வாட்டரால் உங்கள் முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்படியும் செய்யலாம்…

தேவையான பொருட்கள் :-

கொய்யா இலை – 8 இலை
வேப்ப இலை – 4 இலை
மஞ்சள் தூள் – 1 TBSP

செய்முறை 1 :-

முதலில் கொய்யா இலை வேப்பிலை இரண்டையும் சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 2 :-

பின்பு கழுவி எடுத்துக் கொண்ட இலைகளை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

Futuro Organic Turmeric Sticks

செய்முறை 3 :-

பின்பு அரைத்ததை ஒரு பவுளில் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.

செய்முறை 4 :-

பின்பு முகத்தை சுத்தமாக கழுவி எடுத்துக் கொண்டு அரைத்து வைத்த டேஸ்ட்டை உங்கள் முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

செய்முறை 4 :-

பின் நன்றாக உலர விடுங்கள், 15 நிமிடம் காய்ந்த பிறகு ஐஸ் வாட்டர் பயன்படுத்தி கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு :-

இவ்வாறு செய்வதனால் உங்கள் முகம் பொலிவுடன், உங்கள் முகத்தின் அழுக்குகளையும் எடுத்து, உங்களது முகத்தை பிரகாசமாக காட்ட உதவும் இதுவே கொய்யா இலையின் ரகசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here