பூஜையறையில் தினமும் கோலம் ‌போடுபவரா ? அப்போ இந்த ‌ஒரு பொருளை மட்டும் கோலமாவில் சேருங்கள்!

- Advertisement -

நம் வீட்டின் முன்பு சாணம் தெளித்து கோலம் போடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கடும் பனி பொழியும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோலம் போடுவதற்கும் நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது கோலம் போடுவது என்பது நாம் பூமித்தாய்க்கு செய்யும் மரியாதை. கோலம் போடுவது தெய்வங்களை நம் வீட்டிற்குள் வரவழைப்பதற்கு தான்.

-விளம்பரம்-

கோலம் போடும் போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படிக் கோலாகலமான அழகுடன் இருக்கிறதோ அப்படியே கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஐதிகம். தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும். பூஜை அறையில் கோலங்கள் போட்டு வைப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

- Advertisement -

நவகிரகங்களுக்கு ஏற்றாற்போல் தினசரி நமது பூஜை அறையில் கோலம் போடுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தினமும் நமது பூஜை அறையில் நவக்கிரக கோலங்கள் போட்டு வந்தால் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகள் இருந்தும் விடுபட்டு நன்மைகள் நிகழ ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட இந்த கோலத்தினை தினமும் நம்மளால் போட இயலவில்லை என்றாலும் கூட வெள்ளிக்கிழமையில் நாம் இதை கடைப்பிடித்து வரலாம். பூஜை அறையில் முறைப்படி கோலம் இட்டு தீபாராதனை காட்டி தெய்வங்களை வழிபட்டு வந்தோமேயானால், நமக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்திலிருந்தும் விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.

பூஜை அறையில் கோலமிடும் பொழுது செய்யக் கூடாத தவறுகள்

வீட்டில் பூஜை அறை என்று தனியாக இருந்தால் தரையில் கோலம் இடலாம். பூஜை அறை தனியாக இல்லை என்பவர்கள் பூஜை அறைக்கு கீழ் தனியாக ஒரு பலகை வைத்து அதன் மேல் தான் கோலமிட வேண்டும்.

பூஜை அறையில் கோலமிட்டால் அதை தினசரி சுத்தம் செய்ய வேண்டும். சிலர் வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வார்கள் ஆனால் அப்படி செய்யக்கூடாது அது தரித்திரத்தை தான் வரவழைக்கும்.

-விளம்பரம்-

சிலர் பூஜை அறையில் கோலம் போடுவதற்கு கோலமாவு அல்லது சாக்பீஸ் பயன்படுத்துவார்கள். ஆனால், அப்படி செய்யக்கூடாது. பூஜை அறையில் கோலம் போடுவதாக இருந்தால் அரிசி மாவில் தான் கோலம் போட வேண்டும்.

பூஜை அறையில் அரிசி மாவினை கொண்டு கோலமிடுவதால் நமக்கு இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கி எல்லா விதமான நன்மைகளும் நிகழும் என நம்பப்படுகிறது.

கோலம் போட்டு முடித்தவுடன் அதனை அப்படியே விடாமல் மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

-விளம்பரம்-

கோலமாவுடன் சேர்க்க வேண்டிய ஒரு பொருள்

ஆன்மீகத்தை பொருத்தவரை பூஜைக்கு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. அதனை புரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டாலே போதும் உறுதியான பலன் கிடைக்கும். பூஜை அறையில் கோலம் போடும் பச்சரிசி மாவுடன் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை பொடி செய்து கலந்து கொண்டாலே போதும். அதனை தொட்டு நாம் கோலம் போடும் பொழுது நமது பூஜை அறையே மனத்தால் நிறைந்து விடும். இதனுடன் வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து பூஜைகள் நாம் மேற்கொள்ளும் பொழுது லட்சுமி கடாட்சம் பெருகும் என சொல்லப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : பூஜையறையில் செய்யக் கூடாத முக்கியமான தவறுகள்! இந்த தவறுகளை மறந்தும் கூட செய்துவிடாதீர்கள்!!