இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்பது நம் முன்னோர் எழுதிய பழமொழி. அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் முக்கிய பொருட்களில் கொள்ளு முதன்மையானதாக ‘கொள்ளு’ உள்ளது. அதோடு இவை ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கிய ஒன்றாகவும் உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆரோக்கியமான உணவை ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். மேலும் ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் தொடர்பான பாதிப்புகள் ஆகியவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மேனியின் அழகையும் பராமரிக்க உதவும். பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.
பசியை தூண்டுவதிலும், உடல் உறுப்புகளை பலப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. நம் உணவில் அடிக்கடி கொள்ளு சேர்ப்பதன் மூலம் தொண்டை வலி, ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய இயலும். கொள்ளு சாப்பிட்டால், உடல் வலிமை பெறும் என்று நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஆனால் பலருக்கு கொள்ளு என்றால் பிடிக்காது. அதற்கு அதனை அவர்கள் சரியான முறையில் சமைத்து சாப்பிடாததே காரணம் என்று சொல்லலாம். கொள்ளுவை விரும்பி சாப்பிட வேண்டுமெனில், அதனை குழம்பு அல்லது துவையல் செய்து சாப்பிட வேண்டும். கொள்ளுவை நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தி வரலாம். தவிர, இவற்றை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் உள்ளன. இப்படி ஏகப்பட்ட மருத்துவ பண்புகளை கொண்டுள்ள கொள்ளுவில் எப்படி துவையல் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கொள்ளு துவையல் | Kollu Thuvayal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1 கப் கொள்ளு
- 2 டேபிள் ஸ்பூன் மல்லி
- 1 டீஸ்பூன் சீரகம்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 3/4 டீஸ்பூன் மிளகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 5 பல் பூண்டு
- 4 வர மிளகாய்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 1 கொட்டை புளி
செய்முறை
- முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் கொள்ளை போட்டு மிதமான சூட்டில் வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் அதே வாணலியில் மல்லி, சீரகம், மிளகு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் புளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆற விடவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய வெங்காயம், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கொள்ளு துவையல் தயார். இந்த கொள்ளு துவையலை சூடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் ருசியான் கொள்ளு பருப்பு பொங்கல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!