கேரட் பொரியல், எப்போதும் நம் வீட்டில் செய்யக்கூடிய பொரியல்தான். வீட்டில் இருப்பவர்கள் இந்த பொரியலை எப்ப செய்தாலும் சாப்பிட மாட்டாங்க. அப்படியே கடாயில் மிச்சம் இருக்கும். என்ன செய்வது. இதில் பயத்தங்காய்,கொஞ்சம் வித்தியாசமான மசாலா பொருட்களை சேர்த்து போட்டு செய்து கொடுங்கள். இப்படி செய்து கொடுத்தால் நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க அந்த ஸ்பெஷல் பயத்தங்காய் கேரட் பொரியலை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.
எப்பொழுது மதியம் சாதத்துடன் தொட்டுக் கொள்ள ஏதேனும் ஒரு பொரியல் செய்வது வழக்கம் தான். ஒரு சில காய்கறிகள் மட்டும்தான் ஒன்றுடன் மற்றொன்று சேர்த்து செய்யும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். அப்படி கேரட் எந்த காய்கறிகளுடன் வேண்டுமானாலும் சேர்த்து சமைக்கலாம். இவற்றை சேர்த்து செய்யும் பொழுது செய்யும் காய்கறியின் சுவையில் எந்தவித மாற்றமும் இருக்காது. இன்னும் கொஞ்சம் சுவை கூட தான் செய்யும். ஆனால் கேரட் மற்றும் பயத்தங்காய் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் போது மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த சுவையான பயத்தங்காய் கேரட் பொரியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பயத்தங்காய் கேரட் பொரியல் | Long Beans Carrot Stir Fry
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 சிறு கட்டு பயத்தங்காய்
- 1 கேரட்
- 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் எண்ணை
- 1 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
- கறிவேப்பிலை சிறிது
- 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல்
- உப்பு தேவைக்கேற்றவாறு
செய்முறை
- பயத்தங்காய்,கேரட் இரண்டையும் நன்றாகக் கழுவிக் கொள்ளவும். பயத்தங்காயை 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக்கொள்ளவும்,
- கேரட்டின் மேல் தோலை சீவி விட்டு, அதையும் பயத்தங்காய் அளவிற்கு 2 அங்குலத்தில் மெல்லிய நீள துண்டுகளாகவெட்டிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், சீரகம்.பெருங்காய்த்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள காயையும் போடவும்.
- அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, இரண்டு அல்லது மூன்று கையளவு தண்ணீரைத்தெளித்து நன்றாகக் கலந்து விடவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு வேக விடவும். அவ்வப்பொழுது மூடியைத்திறந்து, காயைக் கிளறி விடவும். காய் வெந்ததும் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறிஇறக்கி வைக்கவும்
Nutrition
இதையும் படியுங்கள் : மொறு மொறுன்னு சூப்பரான பெங்காலி அரிசி பருப்பு பகோடா இப்படி செஞ்சு பாருங்க. இதோட சுவை சூப்பராக இருக்கும்!!!